புதன்கிழமை, நவம்பர் 20, 2024

வசூலில் மாஸ்டரை முந்திய ரஜினி.. 2021-இல் டாப் 5 இடங்களை பிடித்த படங்கள்

ஒரு படம் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற வேண்டும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அது ஒரு வெற்றி படமாக கருதப்படும். ஆனால் பெரும்பாலும் படத்தின் வசூலை வைத்துதான் படம் வெற்றியா தோல்வியா என்பதை தீர்மானிக்கிறார்கள். அந்த வகையில் இந்தாண்டு பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்த டாப் 5 படங்களை பார்க்கலாம்.

இந்த வரிசையில் முதல் இடத்தில் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தீபாவளி அன்று வெளியான அண்ணாத்த படம் பிடித்துள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த அண்ணாத்த படம் வெளியான மூன்று வாரத்தில் 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதனை அடுத்து இரண்டாவதாக கடந்த பொங்கலுக்கு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மூன்று வாரத்தில் சுமார் 125 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வொளியான டாக்டர் படம் இடம் பிடித்துள்ளது. கடந்த மாதம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியான இப்படம் வசூலில் புதிய சாதனையே படைத்து விட்டது. நெல்சன் இயக்கத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த டாக்டர் மூன்று வாரத்தில் 72.3 கோடி வசூல் செய்தது.

இப்படங்களை தொடர்ந்து நான்காவது இடத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படமும், ஐந்தாவது இடத்தில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படமும் உள்ளன. இப்படங்கள் மூன்று வாரத்தில் முறையே 52 கோடியும், 23 கோடியும் வசூல் செய்துள்ளன.

என்னதான் ரஜினிக்கு வயதாகிவிட்டது என பல விமர்சனங்கள் எழுந்தாலும் இன்றும் அவர் தான் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தில் உள்ளார். அண்ணாத்தா படம் வெளியான சமயத்தில் பல விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் அதையெல்லாம் தாண்டி அப்படம் வசூலில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அதற்கு காரணம் ரஜினி என்ற மனிதர் மட்டுமே. இதனால் தான் இவர் இப்போதும் சூப்பர் ஸ்டாராக உள்ளார்.

- Advertisement -spot_img

Trending News