புதன்கிழமை, நவம்பர் 20, 2024

காலத்திற்கும் பேசும் கதாபாத்திரத்தில் நடித்த 9 பிரபலங்கள்.. அதுலயும் 6வது உள்ள நடிகை செம்ம கெத்து

தமிழ் சினிமாவில் ஒரு சில கதாபாத்திரங்களை வைத்து மட்டுமே பேரும், புகழும் கிடைத்துள்ளது. அதாவது படத்தின் வெற்றியை தாண்டி ரசிகர்கள் மனதில் நிற்கக்கூடிய கதாபாத்திரத்தில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே நடித்துள்ளனர்.

மேலும் ஒரு சில வசனங்கள் கேட்டாலே போதும் அந்த கதாபாத்திரங்கள் ஞாபகத்திற்கு வந்துவிடும். அந்த மாதிரி தமிழ்சினிமாவில் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள கதாபாத்திரங்கள் மற்றும் வசனங்களை பற்றி பார்ப்போம்.

சந்திரமுகி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் மற்றும் வசனங்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன.

avinash-chandramuki
avinash-chandramuki

சாமியார் வேடத்தில் அவினாஷ் பேசும் வசனமான “இந்த வீட்ல இருக்கு” என்ற வசனமும் இன்று வரை ரசிகர் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பிரபு “என்ன கொடுமை சரவணன்” என சொல்லும் வசனம் இன்று வரை பலரும் இதனைப் பயன்படுத்தி காமெடியாக சித்தரித்து வருகின்றனர்.

சூரியவம்சம்: சூரிய வம்சம் படத்தில் அனைவருக்கும் பிடித்த காமெடியாக அமைந்தது பிச்சைக்கார தாத்தாவின் கதாபாத்திரம்தான் ஏனென்றால் இப்படத்தில் அவர் “மகாபிரபு நீங்க இங்க இருக்கீங்களா, இவன் என்ன பாக்குறீங்க பிச்சைக்கார பைய பத்து பைசா தான் போட்டா பிச்சைக்கார பையன்” எனக் கூறும் வசனம் இன்றுவரை ரசிகர்களிடம் பிரபலமடைந்துள்ளது.

நானும் ரவுடி தான்: நானும் ரவுடிதான் படம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது ராகுல் தாத்தாவின் கதாபாத்திரம் தான். ஏனென்றால் இந்த படத்தில் இவர் செய்யும் சேட்டைகள் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன.

rahul thatha
rahul thatha

பருத்திவீரன்: கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் பருத்திவீரன். இப்படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன. அதில் ஒன்று தான் டீ கடை ஓனராக நடித்திருக்கும் பிணந்திண்ணி எனும் கதாபாத்திரம்.

திரிஷா இல்லனா நயன்தாரா: ஜெய்பிரகாஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரைப்படம்தான் திரிஷா இல்லனா நயன்தாரா. இந்த திரைப்படத்தின் மூலம் இளைஞர் மத்தியில் மிகவும் பிரபலமான ஜிவி பிரகாஷ். இப்படத்தில் செங்கல் சைக்கோ எனும் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தது.

பிரண்ட்ஸ்: விஜய், சூர்யா நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் ஃபிரண்ட்ஸ். இப்படத்தில் சார்லி “கோபாலு” எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இன்று வரை சார்லிக்கு பெயர் வாங்கிக் கொடுத்த கதாபாத்திரம் என்றால் கோபாலு கதாபாத்திரம் தான்.

படையப்பா: ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா. இப்படத்தில் ரஜினிகாந்த், மணிவண்ணன் மற்றும் நாசர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் படத்தில் மிகவும் பேசப்பட்ட கதாபாத்திரம் என்றால் அது ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம்தான். படையப்பா படம் என்றாலே அனைவருக்கும் சட்டென்று ஞாபகத்துக்கு வந்து விடுவார் ரம்யாகிருஷ்ணன். ஏனென்றால் அந்த அளவிற்கு தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

ramya krishnan
ramya krishnan

பிதாமகன்: விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் பிதாமகன். இப்படத்தில் விக்ரம் புத்தி சுவாதீனம் இல்லாமல் அதிகம் பேசாத ஒரு மனிதனாக படத்தில் நடித்திருப்பார். விக்ரமின் வாழ்க்கையில் திரும்பி பார்க்க வைத்த கதாபாத்திரம் என்றால் அது பிதாமகன் படத்தில் நடித்த கதாபாத்திரம் தான். இன்று வரை இப்படத்தின் மீதான வரவேற்பு இருந்து தான் வருகிறது.

நாட்டாமை: சரத்குமாரின் வாழ்க்கையில் மிக முக்கிய படமாக இருப்பது நாட்டாமை. இப்படத்தில் சரத்குமார், கவுண்டமணி மற்றும் செந்தில் போன்றவர்கள் நடிப்பு திறமையால் இன்று வரை இப்படம் பேசப்பட்டு வருகிறது.

nattamai
nattamai

நாட்டாமை படம் என்றாலே விஜயகுமார், சரத்குமாருக்கு அடுத்து அனைவருக்கும் ஞாபகம் வருவது இரண்டு கதாபாத்திரங்கள். அது ஒன்று நாட்டாமை டீச்சர் மற்றொன்று மிச்சர் சாப்பிடும் கதாபாத்திரம். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன.

மேற்கண்ட நடிகர்களில் மற்றும் வசனங்கள் படத்தை தாண்டி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இன்று வரை இந்த படங்களை சொன்னாலே இந்த கதாபாத்திரம் தான் அனைத்து ரசிகர்களுக்கும் ஞாபகம் வரும். இந்த மாதிரி ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டுமே ரசிகர்களிடம் பிரபலமடைந்தது.

- Advertisement -spot_img

Trending News