வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

லாஜிக்கே இல்லாமல் படம் எடுத்த இயக்குனர்கள்.. சங்கர் சார் நீங்களும் இந்த லிஸ்ட்ல இருக்கிங்களே

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் வித்தியாசமாக கதையை உருவாக்கி யாரும் நம்ப முடியாத அளவிற்கு விசித்திரமான காட்சிகளை வைத்திருப்பார்கள் அந்த வரிசையில் ஒரு சில இயக்குனர்கள் இடம்பிடித்துள்ளனர் .அந்த இயக்குனர்கள் யார் யார் அவர்கள் இயக்கிய படங்கள் என்னென்ன எந்த மாதிரியான காட்சிகள் வைத்துள்ளார்கள் என்பதை தற்போது பார்ப்போம்.

வாரணம் ஆயிரம். சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு தங்கச்சியாக நடிகை ஒருவர் நடித்திருப்பார். சூர்யாவும் திவ்யாவும் காதலித்து திருமணம் செய்துகொள்வார்கள் படத்தின் கிளைமாக்சில் இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை இருப்பதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் காட்டியிருப்பார்.

vaaranam aayiram
vaaranam aayiram

படத்தின் ஆரம்பத்தில்லிருந்து இறுதிவரை சூர்யாவிற்கு தங்கச்சியாக நடித்தவர் கடைசிவரை கல்யாணம் பண்ணாமல் தங்கச்சி ஆகவே காட்டியிருப்பார். இது பல ரசிகர்களிடமும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி லாஜிக் இல்லை என பல ரசிகர்களும் கூறி வந்தனர்.

யாரடி நீ மோகினி. தனுஷ் வேலை பார்க்கும் கம்பெனியில் நயன்தாராவும் வேலை பார்ப்பார். ஆனால் தனுசுக்கு பிரண்டாக நடித்திருக்கும் கார்த்திக் குமாருக்கு தெரியாது. கார்த்திக் குமார் தான் நயன்தாராவை திருமணம் செய்வது போல் காட்டி இருப்பார்கள். திருமணம் செய்து கொள்ளும் நயன்தாரா எந்த கம்பெனியில் வேலை பார்க்கிறார் என்பது கூட தெரியாமல் இருப்பதுபோல் இயக்குனர் கதையை வடிவமைத்ருப்பார்.

yaaradi nee mohini
yaaradi nee mohini

தனுசுக்கு தன்னுடைய நண்பனான கார்த்திக்குமார் நயன்தாராவை கல்யாணம் பண்ணுவது தெரியாமல் இருப்பது ஒரு லாஜிக் ஆனால் நயன்தாராவை கல்யாணம் பண்ணும் கார்த்திக்கு அவர் எந்த கம்பெனியில் வேலை பார்க்கிறார் என்பது தெரியாமல் இருப்பது லாஜிக் இல்லை என பல ரசிகர்களும் கூறியுள்ளனர்.

அந்நியன். ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் இப்படத்தில்அம்பியாக விக்ரம் நடித்திருப்பார். பலரையும் ரூல்ஸ் பாலோ செய்ய சொல்லும் அந்நியன்.

anniyan
anniyan

அம்பி விக்ரம் ஹெல்மெட் போடாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி இருப்பார். ஆனால் இவரை மட்டும் அந்நியன் எந்த கேள்வியும் கேட்காமல் இருப்பார். இது பல ரசிகர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பிகில். அட்லி இயக்கத்தில் வெளியான பிகில்  திரைப்படம் விஜய் நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் விஜய் புட்பால் கோச்சாக நடித்திருப்பார்.

bigil

ஆனால் ஒரு காலத்தில் இந்தியாவிற்கு தெரிந்த புட்பால் பிளேயர் ஆக இருக்கும் இவரை ஃபுட்பால் விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் பெண்களுக்கு தெரியாமல் இருக்கும். இது பல ரசிகர்களும் லாஜிக் இல்லை என கூறிவந்தனர்.

கொடி. அனுபமா பரமேஸ்வரன் கொடி படத்தில் ஒருவரிடம் முட்டையை விற்றுக்கொண்டிருப்பார். அப்போது அண்ணனாக நடித்திருக்கும் தனுஷ் முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு முட்டை உடைத்துவிட்டு ஓடுவார்.

kodi
kodi

அப்போது அனுபமா பரமேஸ்வரன் முகத்தில் கர்ச்சீப் இருப்பதால் மூஞ்சியை சரியாக பார்த்திருக்க மாட்டார். ஆனால் பின்பு தம்பியாக தனுஷ் வருவார். அண்ணன் மூஞ்சியை பார்க்காமலேயே தம்பி மூஞ்சியை கண்டுபிடித்துவிடுவார் அனுபமா பரமேஸ்வரன். இது பல ரசிகர்களிடமும் லாஜிக் இல்லை எனக் கூறிவந்தனர்.

தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவிலும் இந்த மாதிரி பல இயக்குனர்கள் லாஜிக் இல்லாமல் படத்தை எடுத்துள்ளனர். அதில் ஒரு சில படங்கள் மட்டுமே இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த செய்தியில் இந்த மாதிரி என்னென்ன படங்கள் லாஜிக் இல்லாமல் எடுத்துள்ளார்கள் என்பதை பார்க்கலாம்.

Trending News