தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி பின்பு தோல்வி அடைந்துவிடும் அப்படி தோல்வியடைந்த படங்களை பற்றி தற்போது பார்ப்போம்.
மாயக்கண்ணாடி: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை வைத்து படங்களை இயக்கக்கூடியவர் சேரன். இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மாயக்கண்ணாடி.
இப்படத்தில் சலூன் கடையில் வேலை பார்ப்பவராக சேரன் நடித்திருப்பார். அதேபோல் கதாநாயகியும் ஒரு சலூன் கடையில் வேலை பார்ப்பார். இருவரும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அதற்காக எல்ஐசி ஏஜென்ட், சினிமா என்று பல வேலைகளை செய்வார்கள்.

ஆனால் இறுதியில் எல்லா வேலைகளிலும் தோல்வி அடைந்து மீண்டும் சலூன் கடையில் வேலை பார்ப்பவர்களாக வந்து விடுவார்கள். ஆனால் கடைசி வரைக்கும் உழைத்து முன்னேற வேண்டும் என்று படத்தில் யோசிக்காமல் எடுத்திருப்பார்கள். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மிகப்பெரிய தோல்வியடைந்தது.
குருதிப்புனல்: குருதிப்புனல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமல்ஹாசனின் சேவையை பாராட்டி தங்கப்பதக்கம் கொடுப்பார்கள். அந்த தங்கப்பதக்கத்தை அவருடைய மகன் காரில் வைக்க எடுத்துச் செல்வான். அப்போது நாசர் மகன் பழிவாங்குவதற்காக கமல்ஹாசன் மகனிடம் சண்டை போடுவார்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் கமல்ஹாசன் நாசரை கொன்றுவிடுவார். அப்போதே படம் முடிந்து விடும் ஆனால் தேவையில்லாமல் படத்தின் சில காட்சிகள் படம் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
அயோக்யா: விஷால் நடிப்பில் வெளியாகி தோல்வியடைந்த திரைப்படம் தான் அயோக்யா. இந்த படத்தில் முதலில் வில்லத்தனமான போலீசாக இருந்து பின்பு நல்லவனாக விஷால் மாறுவார்.

அப்போது குற்றவாளிகளை பழிவாங்குவதற்காக கோர்ட்டில் விஷால் ஆஜர் படுத்துவார். ஆனால் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு வரும். அதனால் அந்த குற்றவாளிகள் தாக்கிய கூடாது என்பதற்காக விஷால் நானும் அந்த குற்றவாளிகளின் கூட்டாளிதான் என கூறி குற்றவாளிகளுடன் சேர்ந்து இவரும் தண்டனை பெற்றுக் கொள்வார்.
ஆனால் உண்மையில் நீதிமன்றத்தை பொருத்தவரை போலீஸ்காரரின் சாட்சி செல்லாது. ஆனால் படத்தில் பொய்யாக சித்தரித்து படத்தை முடித்திருப்பார்கள். இப்படமும் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வி அடைந்தது.
சாமி 2: ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் சாமி 2 இதன் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்தை ஹரி இயக்கினார். ஆனால் ஏன்டா படத்திற்கு சென்றோம் என பல ரசிகர்கள் வருத்தப்படும் அளவிற்கு படத்தில் பல காட்சிகளை வைத்தார் ஹரி. படத்தில் சில மணி நேரம் கழித்து தான் பலருக்கும் தெரியும் விக்ரம் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது. அந்த அளவிற்கு படத்தில் விக்ரம் யார் அப்பா, யார் மகன் என்பதே பலருக்கும் புரியாமல் போனது.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய காதல் சொல்வதற்காக கீர்த்தி சுரேஷ் ஹெலிகாப்டரில் இறங்கி விக்ரமிற்கு காதல் சொல்லுவார் உண்மையான காதலர்கள் கூட இந்த சீனை பார்த்து ஏன்டா காதலித்தோம் என வெறுத்து உள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் படத்தில் நான் சாமி இல்ல பூதம் என சொல்லும் வசனம் எல்லாம் ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்ளாத குறைதான். மேலும் கட்சி மீட்டிங்கில் ஒரு நபர் உட்கார்ந்து இருக்கும்போது அப்போது கரண்ட் கட்டாகி அந்த நபரின் சட்டையில் மொபைல் வெளிச்சம் தெரியும், உடனே நமது ஹீரோவான விக்ரம் தூரத்திலிருந்து அந்த செல்லில் லைட்டை பார்த்து டமால் என அந்த நபரை சுட்டு விடுவார். இதையெல்லாம் பார்த்துவிட்டு படத்தில் உட்காராமல் பல ரசிகர்கள் ஓடிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.