தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக இருப்பவர் நடிகர் விஜய். சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் கோடிக்கணக்கில் வசூல் செய்து சாதனை புரிந்து வருகின்றனர்.
கடைசியாக பொங்கல் அன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வருகிறது. பல நாட்கள் கழித்து இந்த படம் வெளியாகி வசூல் சாதனை புரிந்துள்ளது அதனால் தியேட்டர் உரிமையாளர்கள் விஜய் வசூல் சக்கரவர்த்தி என்று சமூகவலைதள பேட்டிகளில் கூறி வருகின்றனர்.
கொரானாவினால் யாருக்கு அதிர்ஷ்டம் அடித்ததோ இல்லையோ OTT தளங்களுக்கு அதிர்ஷ்டம் தான். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மிஸ் இந்தியா மற்றும் பென்குயின், ஜெயம் ரவி நடிப்பில் 25வதுபடமான பூமி ஆகிய படங்கள் OTT தளத்தில் வெளியாகின.
இதனால் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் சுல்தான் மற்றும் சக்கரா போன்ற படங்கள் முதலில் OTT வெளியாவதாக திட்டமிட்டிருந்தனர். தொடர்ந்து பல படங்களை OTT தளத்தில் வெளியாகி வந்த நிலையில் விஜயின் மாஸ்டர் படத்தினால் தற்போது OTT தளங்களுக்கு ஆபத்து வந்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் பட்டைய கிளப்பி ரசிகர்களின் ஆதரவை முழுமையாக பார்த்து விட்டதால். தற்போது சுல்தான் மற்றும் சக்ரா போன்ற திரைப்படங்கள் தியேட்டர்களில் மட்டும் தான் வெளியிடுவோம் என்று முடிவு செய்துள்ளனர்.
இதனால் OTT தளங்களுக்கு இனிமேல் ஆப்புதான் எனக் கூறி வருகின்றனர் கோலிவுட் வட்டாரங்கள்.