தமிழ் சினிமா ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த பல தயாரிப்பாளர்கள் தற்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு தற்போது படங்கள் தயாரிக்காமல் மௌனம் சாதித்து வருகின்றனர். அவர்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம்.
கேடி குஞ்சுமோன். 90 காலகட்டத்தில் தியேட்டரில் போய் சினிமா பார்த்தவர்களுக்கு தெரியும் யார் குஞ்சுமோன் என்பது. ஏ ஆர் எஸ் பிலிம் இன்டர்நேஷனல் என்ற பெயரில் பல ஹிட் படங்களை தயாரித்துள்ளார் குஞ்சுமோன்.
இவர் தயாரித்த முதல்வன் மற்றும் காதலன் போன்ற படங்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தன. அதன் பிறகு ரட்சகன், சக்தி மற்றும் காதல் தேசம் போன்ற படங்கள் இவருக்கு நஷ்டத்தை தந்ததால் படங்களை தயாரிப்பதில்லிருந்து ஒதுங்கிவிட்டார்.
ஏ எம் ரத்னம். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஏ எம் ரத்னம் என்றாலே தெரியாத ஆட்கள் கிடையாது. அந்த அளவிற்கு இவர் தயாரிப்பில் வெளி இந்தியன் மற்றும் கில்லி போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. அதன் பிறகு குஷி மற்றும் ரன் போன்ற படங்களும் வெற்றி பெற்றன.
தனது மகனை வைத்து எப்படியாவது சினிமாவில் பெரிய நடிகராக வரவேண்டும் என்பதற்காக ஒரு சில காலங்கள் உழைத்தார். ஆனால் மகன் நடித்த படங்களும் வெற்றி பெறாமல் அதுமட்டுமில்லாமல் இவர் தயாரிப்பில் வெளியான படங்களும் பெரிய அளவில் வசூலில் சாதனை படைக்காமல் தொடர் தோல்வி காரணமாக தற்போது சினிமாவை விட்டு விலகி உள்ளார்.
செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன். மாணிக்க நாராயணம் பல படங்களை தயாரித்துள்ளார். அதாவது கூலி, முன்தினம் பார்த்தேன் மற்றும் வேட்டையாடு விளையாடு போன்ற படங்கள் வசூல் ரீதியாக நஷ்டம் ஆனது. அதனால் படங்கள் தயாரிப்பில்லிருந்து விலகினார்.
ஆஸ்கர் பிலிம்ஸ் . ஒரு காலத்தில் நம்பர் ஒன் புரோடக்சன் கம்பனி ஆகயிருந்தது ஆஸ்கர் பிலிம் தான். தசாவதாரம், ஐ மற்றும் அந்நியன் போன்ற படங்கள் மிகப் பெரிய வசூல் சாதனை படைத்தன. ஆனால் நடுவில் ஒரு சில படங்கள் சொதப்பல் காரணமாக ஆனந்த தாண்டவம், வல்லினம், மற்றும் திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்கள் தோல்வி காரணமாக தற்போது வரை படங்கள் தயாரிப்பில்லிருந்து விலகியுள்ளார்.