தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் படத்தின் கதையை மையமாக வைத்து படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். அது என்னென்ன படங்கள் என்பதை பார்ப்போம்.
3: தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் 3. இப்படத்திற்கு 3 என பெயர் வைக்க காரணம் தனுஷின் பள்ளிப்பருவம், காலேஜ் பருவம் மற்றும் திருமண வாழ்க்கை பருவம் என மூன்று பருவத்தையும் மையப்படுத்தி தான் இப்படத்திற்கு ஐஸ்வர்யா தனுஷ் 3 என பெயர் வைத்துள்ளார்.
உள்ளம் கேட்குமே: ஷாம், லைலா, ஆர்யா மற்றும் அசின் போன்றோர் நடிப்பில் வெளியான திரைப்படம் உள்ளம் கேட்குமே. இப்படத்திற்கு முதலில் வைத்த பெயர் பெப்ஸி. இந்தப் பெயரை வைத்தால் வரி விலக்கு கிடைக்கும் என்பதால் பெப்ஸி விளம்பரத்தில் வரும் “உள்ளம் கேட்குமே மோர் மோர்” என்ற பாடல் வரியை பயன்படுத்தி உள்ளம் கேட்குமே என படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.
வாலி: அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் வாலி. இப்படத்திற்கு வாலி என பெயர் வைக்க காரணம் இராமாயணத்தில் வாலி மற்றும் சுக்ரீவன் என இரண்டு கதாபாத்திரங்கள் உண்டு.
வாலி கதாபாத்திரம் கெட்டவன். வாலி தம்பி சுக்ரீவன் மனைவி மீது ஆசைப்படுவார் அதனாலதான் இப்படத்திற்கு வாலி என பெயர் வைத்துள்ளார்.
ஏய்: சரத்குமார் பிளாஷ்பேக்கில் நடுரோட்டில் போலீசாக நடித்திருக்கும் ஆசிஷ் வித்யார்த்தியிடம் ஏய் என மிரட்டுவார். அதன்பின் என்னையே மிரட்டுகிறாயா என பழி வாங்குவார். இதனால தான் இந்த படத்திற்கு ஏய் என பெயர் வைத்துள்ளனர்.
12B. ஹீரோ இன்டர்வியூ செல்வதற்காக 12B பஸ்சை மிஸ் செய்துவிடுவார். ஹீரோ 12B பஸ்ஸில் ஏறினால் என்ன கதை, பஸ்ஸில் ஏறாவிட்டால் என்ன என்பதுதான் கதை. அதனாலதான் அப்படத்திற்கு 12B என்ற பெயரை படத்தின் இயக்குனர் வைத்துள்ளார்.
அந்நியன்: ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அந்நியன் இப்படத்திற்கு அந்நியன் பெயர் வைக்க காரணம் உடம்பில் வேறு வேறு கதாபாத்திரங்கள் இருப்பதால் அநியாயமான கதாபாத்திரமாக இருக்கும். அதனாலதான் ஷங்கர் இப்படத்திற்கு அந்நியன் என பெயர் வைத்துள்ளார்.
ஆனால் இன்று தான் ஷங்கர் அவரது சமூக வலைதள பக்கத்தில் அந்நியனின் படத்தை ஹிந்தியில் ரன்வீர் சிங் வைத்து இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
குருதிப்புனல்: திரைப்படத்தில் கமல் அர்ஜுன் என அனைவரும் ரத்தம் சிந்தி இறப்பதால்தான் இப்படத்திற்கு குருதிப்புனல் என பெயர் வைத்துள்ளனர்.