ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஹரிஷ் கல்யாணத்துக்கு கை கொடுத்த புது ராசி.. நயன்தாராவையே ஓரங்கட்டிய செகண்ட் இன்னிங்ஸ்

Tamil movies Annapoorani and parking collection: சாரு யாரு தாராள பிரபு டோய் என்று பிரபலமான ஹரிஷ் கல்யாண் திரைத்துறையில் என்டர் ஆகி 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இவர் படங்களில் கதை மற்றும் இவரது நடிப்பு பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக அவை பெரிய அளவில் பேசப்படவில்லை.

தன் தந்தை கல்யாணின் சப்போட்டோடு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார் ஹரிஷ். பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தபோதும் தனது வசீகரத் தோற்றத்தால் அடையாளம் காணப்பட்ட ஹரிஷ், பிக்பாஸ் சீசன்1 ல் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

தொடர்ந்து  தாராள பிரபு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஓமன பெண்ணே, லெட்ஸ் கெட் மேரீட் என லவ்  சப்ஜெக்ட்டையே தூக்கி சுமந்த ஹரிஷ் அவர்களுக்கு கதை ரீதியாக, வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தது. கல்யாண வயசு தான் வந்துருச்சுடா என 2022 ல் நர்மதா உதயகுமாரை திருமணம் செய்து கொண்டார் ஹரிஷ்.

Also Read:  கீரியும், பாம்புமாய் ஹரிஷ் கல்யாண் MS பாஸ்கர்.. பார்க்கிங்-ஆல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம் இதோ!

திருமணத்திற்கு பின்  தோனி என்டர் டைமண்ட் தயாரிப்பில் லெட்ஸ் கெட் மேரீட்  இல் நடித்தார். முதலுக்கு மோசம் இல்லாமல் ஓரளவு போட்ட பட்ஜெட்டை எடுத்தது இப்படம். திருமணத்திற்கு பின் ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் சமீபத்தில் வெளியாகி  நயன்தாராவின் அன்னபூரணியுடன் போட்டி போட்டது.

சிறப்பான கதையம்சம் கொண்ட இரு படங்களும் சமமாக வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்க  சென்னையின் மழை வெள்ளத்தால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. புதிய பட்ஜெட் படங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வர ரெடியாகி கொண்டிருக்கும் வேளையில் இரு படங்களும் ஸ்லோ மோசனில் வசூலை ஈட்டி வருகிறது.

படம் வெளியான 7 நாள் முடிவில் அன்னபூரணி 3.94 கோடியும், பார்க்கிங் 3.30 கோடியும் வசூலை ஈட்டி உள்ளது. திறமை, உழைப்பு மற்றும் சிறப்பான கதை அம்சம் இருந்தும் இயற்கை கை கொடுக்காத நிலையில் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளன இப்படங்கள்.  இது இப்படி இருக்க ஹரிஷ் கல்யாண் நடிப்பில் லப்பர் பந்து  மற்றும் 100 கோடி வானவில் போன்ற படங்கள் அடுத்த ஆண்டு ரிலீஸ்க்கு காத்துக் கொண்டிருக்கிறது.

Also Read: 2023 அதிகமா எதிர்பார்க்கப்பட்டு புஸ்ன்னு போன 5 நடிகர்கள்.. நயன்தாராவிற்கு கொக்கி போடும் கோமாளி

Trending News