ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

புஷ்பா-2 படத்திற்கு வழி விட்ட தமிழ் படங்கள்.. இதெல்லாம் கால கொடுமை

பொதுவாக தெலுங்கு இண்டஸ்ட்ரியை பொறுத்த அளவில், அவர்கள் மொழியில் ஒரு படம் வெளியாகிறது என்றால், அந்த படத்துக்கு தான் Priority கொடுப்பார்கள். அனால் கோலிவுட்டை பொறுத்த அளவில், அது தலைகீழாக உள்ளது. வேறு மொழி படங்கள், பான் இந்தியா படங்கள் வெளியாக இருந்தால், அந்த படங்களுடன் தமிழ் படத்தை மோத விட தயங்குவார்கள்.

அது தான் தற்போதும் நடந்துள்ளது. வரும் டிசம்பர் 5-ஆம் தேதி, புஷ்பா 2 படம் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பீலிங்ஸ் பாடல், இணையத்தில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படம் 5-ஆம் தேதி வெளியாக இருந்தாலும், இந்த படத்தின் இறுதி பணிகள் இதுவரை முடிந்தபாடில்லை.

புஷ்பா-2 படத்திற்கு வழி விட்ட தமிழ் படங்கள்

சூழ்நிலை இப்படி இருக்க, ஒரு சில தமிழ் படங்கள் புஷ்பா 2 படத்துக்காக வழி விட்டுள்ளது. டிசம்பர் 6-ஆம் தேதியில் வெளியாக இருந்த பேமிலி படம், பிளட் அண்ட் பிளாக் ஆகிய இரு படங்களும் தள்ளி போயுள்ளது. மேலும் இந்த படத்தை தவிர அந்த நாளில் ராஜா கிளி, ஆலம்பனா போன்ற ஒரு சில படங்கள் வெளியாக இருந்தது.

இருப்பினும், அந்த படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளார்கள். இருப்பினும் இந்த மாதம், விடுதலை 2, ராஜா கிளி, சூது கவ்வும், ஒன்ஸ் அபொன் எ டைம் இன் மெட்ராஸ் போன்ற படங்கள் வெளியாகவுள்ளது. நிறைய படங்கள் பொங்கலுக்கு தள்ளி போனதுக்கு காரணமே புஷ்பா 2 தான் என்றும் கூறப்படுகிறது.

Trending News