சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தொடர்ந்து அதிமுக வெற்றி நடை போட மீண்டும் வாய்ப்பு தாருங்கள்.. தமிழக முதல்வரின் நிறைவு பிரச்சார உரை!

வரும் ஆறாம் தேதி நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம், இன்றுடன் முடிவடைவதால் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தனது நிறைவு பிரச்சார உரையை ஆற்றியுள்ளார்.

ஏனென்றால் நாட்டிலேயே நீர் மேலாண்மையில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு குடிமராமத்து, தடுப்பணைகள், நீர் வளத்தைப் பெருக்க எண்ணற்ற திட்டங்கள், காவிரி முதன்மைப்படுத்தும் குழு அமைத்தல்,

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிப்பு, காவிரி மேலாண்மை ஆணையம்,  என பல்வேறு நீர் மேலாண்மை திட்டங்களை அதிமுக அரசு மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

eps
eps

மேலும் பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் என அனைவருக்கும் பல திட்டங்களை வகுத்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

ஆகையால் மறைந்த புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு, நம் எல்லோருக்கும் பேரிழப்பு. ஆகவே இன்றுவரை அவருடைய வழியில் சென்று கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

எனவே தமிழகத்தை தொடர்ந்து முதல் மாநிலமாக விளங்க வெற்றி நடை போடுவதற்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தன்னுடைய தேர்தல் பிரச்சார நிறைவுரை தமிழக மக்களிடம் வேண்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending News