வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கொரோனா உதவிக்கு என்னை அழைக்கலாம்.. வெறிகொண்டு களத்தில் திமுக, மா.சுப்பிரமணியன் வெளியிட்ட போன் நம்பர்

தமிழ்நாடு தொடர்ந்து கொரோனாவை எதிர்த்துப் போராடி வருகிறது. அதுவும் சமீபத்தில் கொரோனா இரண்டாம் அலை படு தீவிரமாக பரவி பலரும் பாதித்துள்ளனர்.

குறிப்பிட்ட படுக்கை அறைகளை மட்டும் வைத்திருக்கும் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதித்தவர்கள் அதிகம் வருவதால் என்ன செய்வதென தெரியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதனால் இந்திய அரசாங்கம் கொரோனா தடுப்பூசியை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொடுத்து உதவி வருகிறது. தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து இருந்தாலும் அதன் பாதிப்பு குறைந்த பாடில்லை.

corona-emi-india
corona-emi-india

தற்போது தமிழக அரசு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்காக பல தரப்பினரிடமும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் 143 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி விரைவில் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவி வேண்டுமென்றால் தன்னை அணுகலாம் மேலும் 9176700000 மற்றும் 044 -22 500999 இந்த நம்பருக்கு அழைக்கலாம்.

மருத்துவமனையான தொடர்புகளுக்கு வாட்ஸ் அப்பில் மெஸேஜ் செய்யலாம் எனவும் கூறியுள்ளார். மருத்துவமனை உதவிக்கு எந்த நேரத்திலும் இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்

Trending News