வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு.. மொத்தம் 10 தளர்வுகள் எங்கு, என்னென்ன.?

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பித்தது. அதன்மூலம் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக பல குடும்பங்களும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகினர். ஆனால் அதையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு கொரோனா தடுப்பூசி பல்வேறு முயற்சிகளில் போட வேண்டும் என ஈடுபட்டு வருகிறது.

சென்னை போன்ற பெருநகரங்கள் ஊரடங்கு பிறப்பித்தது மூலம் ஓரளவிற்கு கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஆனால் சேலம், திருச்சி, கரூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக தற்போது மேற்கு மண்டல மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

corona-tamilnadu-bloodgroup-cinemapettai
corona-tamilnadu-bloodgroup-cinemapettai

தற்போது தமிழக அரசு எந்தெந்த இடங்கள், என்னென்ன தளர்வுகள் என்பதை வெளியிட்டுள்ளது.

மளிகை, பலசரக்கு, காய்கறிகள், பூக்கடைகள்,  நடைபாதை கடைகள், இறைச்சி மற்றும் மீன்கள் போன்றவை காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதி.

மீன் சந்தைகள் மற்றும் இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி.

சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒருநாளைக்கு 50% டோக்கன் மட்டும் வழங்க அனுமதி. பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதி.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% செயல்பட அனுமதி.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் 30% ஆட்கள் மற்றும் செயல்பட அனுமதி.

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகங்கள் வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் வீடு சேவைகள் இ பதிவுடன் அனுமதி.

மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல் ஹார்ட்வேர் மற்றும் உதிரிபாகங்கள் புத்தக கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

வாடகை வாகனங்கள் டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் இப்படி உடன் செயல்பட அனுமதி ஆனால் ஓட்டுநரை தவிர்த்து இரண்டு பேர் மட்டுமே இதில் பயணிக்க அனுமதி.

Trending News