தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கொரோனா பரவல் காரணமாக தற்போது லாக் டவுன் போட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா பரவல் குறைப்பதற்காக முதலில் ப்ளாக் டவுன் போடப்பட்டு பின்பு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வெளி வர தொடங்கினர்.
ஆனால் ஓமிக்ரான் என்ற புதிய வைரஸ் தற்போது அதிகமாக பரவி வருவதால் தமிழ்நாடு அரசு தற்போது ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் கொரோனா வைரஸ் பரவல் குறையும் வரை கடைபிடிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் முக கவசம் அணியாமல் இருப்பார்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது மட்டுமில்லாமல் குழந்தை தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டவை: தமிழ்நாட்டில் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் தங்கும் விடுதிகளில் 50% மட்டுமே அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
துணி கடை மற்றும் நகை கடைகளில் ஒரு மணி நேரத்திற்கு 50% பேர் மட்டுமே அனுமதி. திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதி. இறப்பு சார்ந்த சோக நிகழ்ச்சிகளுக்கு 50 பேர் மட்டுமே அனுமதி. கேளிக்கை விடுதிகள் உடற்பயிற்சிக் கூடங்கள் விளையாட்டுக்கள் போன்றவைக்கு ஒரு மணி நேரத்திற்கு 50% பேர் மட்டுமே அனுமதி
அனைத்து திரையரங்குகளிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளுக்கு 50% மட்டுமே அனுமதி. திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் படி நடத்தப்படும். அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் இசை நாடகம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு 50% மட்டுமே அனுமதி.
9.01.2022 வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி விமானம் பேருந்து ரயில் பயணம் செய்பவர்கள் பயணம் சீட்டு வைத்துக்கொள்வது அவசியம். பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சி மற்றும் புத்தக கண்காட்சி நடத்துவதற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பேருந்து மற்றும் ரயிலில் 50% பேர் மட்டுமே பயணிக்க அனுமதி. மெட்ரோ ரயில்களில் 50% பேர் மட்டுமே பயணிக்க அனுமதி. அனைத்து அரசு மற்றும் தனியார் ஆல் நடத்தப்படும்கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பால், மருத்துவம் பாதுகாப்பு மற்றும் பத்திரிகை போன்ற நிறுவனங்களுக்கு மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை.