திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களில் தமிழகம் முதலிடம்.. விருது வழங்கும் மத்திய அரசு, குவியும் பாராட்டுக்கள்!

தற்போது தமிழக அரசு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் தலைமையில் பெண்களின் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும் பெண்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் வகையில் ‘காவலன் செயலி’ மற்றும் அம்மா ரோந்து வாகனங்கள் என பல திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன வழங்கும் திட்டத்தின் மூலம் இதுவரை 2.85 லட்சம் மகளிர் பயனடைந்துள்ளனர். அதைப்போல் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் கறவை மாடுகள் மற்றும் வெள்ளாடு, செம்மறி ஆடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 1,11,444 கறவை மாடுகளும் 52,88,608 ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ. 50,000  வரை வைப்பு நிதியாக 10 லட்சம் பெண் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் பெண் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 3 மாதத்திலிருந்து 9 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை ரூ. 18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

tn-award

மேலும் காவல் துறையில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு, உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, மகளிர் உடல் நலம் பேண, அம்மா முழு உடற்பரிசோதனை போன்ற திட்டங்களால் தமிழக பெண்கள் தங்களது வாழ்வில் வெற்றி நடை போடும் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளன.

அதன் விளைவாக தற்போது மத்திய அரசு தமிழகம் பெண்கள் மற்றும் குழந்தைகளை மையப்படுத்திய திட்டங்களில் முன்னிலை வகித்து உள்ளதாக மத்திய அரசு விருது அளித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்களாக சென்னை மற்றும் கோவை ஆகிய இடங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திற்கு தற்போது கிடைத்துள்ள இந்த விருதிற்காக பலர் தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிகிறது.

Trending News