வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இளையராஜாவை புறக்கணிக்கும் தமிழ் மக்கள்.. பதவிக்காக இப்படியா பண்றது.!

தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜா 80 காலகட்டத்தில் இருந்து இன்று வரை தனது இசையின் மூலமாக பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை தன வசம் கட்டிப் போட்டவர். இளையராஜாவின் இசையை கேட்டால் தான் தூக்கமே வரும் அந்த அளவிற்கு இவரது பாடல்கள் இன்றளவும் அனைவராலும் கேட்கப்படுகிறது.

அப்படி இருக்கும் பட்சத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி புதுவிதமான இசையை ரசிகர்களின் செவிக்கு தேனை பாய்ச்சினார். அதன் விளைவாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது முதல் படமான ரோஜா திரைப்படத்திலேயே தேசிய விருது பெற்ற நிலையில், இவரது இசையில் படத்தை எடுப்பதற்காகவே பல இயக்குனர்கள் அவர் வீட்டு வாசலில் நின்ற கதைகள் எல்லாம் உண்டு.

Also Read : டாப் இயக்குனராக வந்திருக்க வேண்டிய பிரபலம்.. இளையராஜாவால் பறிபோன 13 பட வாய்ப்புகள்

அந்த சமயத்தில் இளையராஜாவின் இசைக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இருந்தாலும் இசைஞானி இளையராஜா பல கச்சேரிகளை நடத்தி தனது இசை பணியை தொடர்ந்து செய்து வந்தார். மேலும் இளையராஜாவின் இசை கச்சேரி என்றாலே அந்த அரங்கமே ஈக்கள் போல் மக்கள் கூட்டம் குவிந்து இருப்பர்.

இதனைத் தொடர்ந்து இளைய ராஜாவை வைத்து மிக பிரம்மாண்டமாக ரூபாயில் ஒரு இசைக் கச்சேரி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக அந்தக் கச்சேரிக்கு டிக்கெட்டுகள் வியாபாரம் ஆகவில்லை. இதனால் அந்த கச்சேரி நிறுத்தப்பட்டது. இதுவே இளையராஜாவின் சினிமா வாழ்க்கையில் நடந்த முதல் அவமானமாக பார்க்கப்படுகிறது.

Also Read : ஏ ஆர் ரகுமானுக்கு இளையராஜா செய்த துரோகம்.. பல வருடம் கழித்து வெளிவந்த ரகசியம்

இதற்கு காரணம் இளையராஜா சில வருடங்களாக அரசியல் பேசும் பேச்சு தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான கருத்துக்களாக அமைந்துள்ளதால் அவர் மீது தமிழ் மக்கள் கோபத்தில் உள்ளனர். இதனால் அவர் எங்கு சென்றாலும் முன்பு போல் இல்லாமல் தற்போது அவரை அவமதிக்கும் செயல்களும் நடந்து வருகிறது.

ஆனால் இதற்கு மாறாக அதே துபாயில் நடைப்பெற்ற ஏ.ஆர். ரஹ்மானின் இசை கச்சேரியின் டிக்கெட் விலை 3 மடங்கு அதிகமாக விற்கும் அளவிற்கு மக்கள் கூட்டமாக குவிந்தனர். மிகவும் பிரமாண்டமாகவும் இந்த கச்சேரி கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதனைப் பார்த்து இளையராஜா மாற வேண்டும் இல்லை என்றால் மக்கள் அவர் பாடல்களை மறக்க மாட்டார்கள் இளையராஜாவை மறந்து விடுவார்கள்.

Also Read : இளையராஜாவை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள்.. வாய்ப்புகள் பறிபோனாலும் வீம்பாய் நின்ற இசைஞானி

Trending News