புதன்கிழமை, ஜனவரி 1, 2025

தமிழில் டப்பிங் செய்து ஹிட்டான 7 ஹாலிவுட் படங்கள்.. இந்த வரிசையில் இரண்டு முறை இடம் பிடித்த பிரபல நடிகர்

தமிழ் சினிமா பொருத்தவரை தமிழ் படங்களுக்கு எந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறதோ அதேபோல் மற்ற மொழி படங்களுக்கு ஆதரவு இருக்கும்.ஆனால் மற்ற படங்கள் பொருத்தவரை நல்ல கதை இருந்தால் மட்டுமே தமிழ் சினிமா ரசிகர்கள் அதனை கொண்டாடுவார்கள். அப்படி தமிழ் சினிமா ரசிகர்களால் பார்க்கப்பட்டு வெற்றிபெற்ற படங்களைப் பற்றி தற்போது பார்ப்போம்.

டெர்மினேட்டர்  2

ARNOLD SCHWARZENEGGER

டெர்மினேட்டர் முதல் பாகம் தமிழ் ரசிகர்களால் பெரிதளவு பார்க்கப்படவில்லை ஆனால் அதன்பிறகு அர்னால்ட் ஸ்வாஸ்நேகர்  நடிப்பில் வெளியான டெர்மினேட்டர்  2  தீ ஜட்ஜ்மெண்ட் டே  மிகப்பெரிய வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

இண்டிபெண்டன்ஸ் டே 

independence day
independence day

அர்னால்டுக்கு அடுத்தபடியாக அதிகம் தமிழ் ரசிகர்கள் விரும்பிய நடிகர்தான் வில் ஸ்மித். இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து தமிழ் ரசிகர்கள் இவரை வெகுவாகப்  பாராட்டினர்.

பேபிஸ் டே அவுட்

babys day out
babys day out

குழந்தை மற்றும் கிங்காங் நடிப்பில் வெளியான பேபிஸ் டே அவுட் திரைப்படம் குடும்பத்தோடு படம்  பார்க்கப்பட்டு முழு நீள காமெடி படமாக வெளியாகி  தமிழ் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பை பெற்றது.

மென் இன் பிளாக்

men in black
men in black

தமிழ் ரசிகர்களால் பார்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் மென் இன் பிளாக் இப்படத்தில் வில் ஸ்மித் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படம் வெளிவந்த போது வில் ஸ்மித் நடிப்பை பலரும் வெகுவாக பாராட்டினர்.

ஜுராசிக் பார்க்

jurassic park
jurassic park

ஜுராசிக் பார்க் மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஜுராசிக் பார்க் திரைப்படம் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடியது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் வந்த கிராபிக்ஸ் காட்சிகள் தமிழ் ரசிகர்கள் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.

காட்சில்லா, அலெக்ஸாண்ட்ரா மற்றும் அண்டர் கவர் போன்ற படங்களும் மிக பெரிய வரவேற்பைப் பெற்றது.                                                                                                

Trending News