வருடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டு பெருமிதம் கொள்கிறது தமிழ் சினிமா வெளியிடும் அனைத்து படங்களும் போட்ட பணத்தை எடுக்கிறதா என்றால் நிச்சயமில்லை. இவை எல்லாவும் கடந்து பரோடியூசர் செய்த பாக்கியத்தால் படபடவென ஓடியபடங்களும் உண்டு. இப்போதைய செய்தியில் அப்படியக வசூலை வாரிக்குவித்த படங்களை பார்க்கலாம்.
பேட்ட: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்தியின் தவிர்க்க முடியாத நடிகர் நவாசுதின் சதீப் நடிப்பில் 2019-ல் வெளிவந்த படம் பேட்ட. நீண்ட காலத்திற்கு பிறகு ஹீரேயிசம் காட்டும் வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார் சூப்பர ஸ்டார். அன்றைய மதிப்பில் இப்படம் வசூலித்த தொகை 250 கோடிகள்.
சர்க்கார்: விஜய் நடிப்பில் முருகதாஸ் 3ம் முறை கூட்டணி அமைத்த படம் சர்க்கார். கரு.பழனியப்பன், வரலட்சுமி, சரத்குமார் என அனைவரின் நடிப்பும் அட்டகாசம் செய்திருப்பார் இயக்குனர். இந்த படம் சர்வதேசாசந்தை உட்பட 260கோடிகளை சம்பாதித்தது.
மெர்சல்: இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் 2ம் முறை கூட்டணி அமைத்த படம் “மெர்சல்”. மூன்று கதாப்பாத்திரங்களில் வரும் தளபதியை வைத்து அழகாக ஒரு கதை சொல்லி இருப்பார் அட்லி. 2017ல் வெளிவந்த மெர்சல் உலக அளவில் 260கோடிகளை சம்பாதித்தது.
கபாலி: தலைவர் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணியில் முதல் படமாக வந்தது “கபாலி”. மலேசியா தமிழர்களுக்கும் சீனர்களுக்குமான போராட்டங்களை மையப்படுத்தி அழகாக செதுக்கி இருப்பார் இயக்குனர் பா.ரஞ்சித். 2016ல் வெளிவந்த கபாலி 286கோடிகளை சம்பாதித்தது.
எந்திரன்: இயக்குனர் ஷங்கர் இரண்டாம் முறையாக சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கிய படம் எந்திரன். ஐஸ்வர்யா ராய் தலைவர் ரஜினி நடிப்பில் பட்டாசாக ஓடியது. 2010ல் வெளிவந்த இப்படம் 290கோடிகளை வசூலித்தது.
பிகில்: தளபதி விஜயுடன் மூன்றாவது முறையாக அட்லி இணைந்த படம் என்பதனாலும் இப்படத்திற்கு பெரும் எதிரபார்ப்பு இருந்தது பற்றாக்குறைக்கு லேடி சூப்பர் ஸ்டாரும் ஜோடியாக இருக்க படம் வேற லெவல் ரீச். 2019-ல் வெளிவந்த இப்படம் 300கோடிகளை வசூலித்தது.
சாஹோ: தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என ரிலீஸ் செய்யப்பட்ட படம் சாஹோ. பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகிய படம் என்பதால் எல்லா மாநிலங்களிலும் எதிர்பார்ப்பு அதிகம் தான். 2019ல் வெளியான இப்படம் 433 கோடிகளை சம்பாதித்தது.
பாகுபலி :பிரபாஸ் ராணா நடிப்பில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தியில் வெளியானது இந்த படம். தமன்னா அனுஷ்கா சத்யாராஜ் ரம்யா கிருஷ்ணன் என அனைவரையும் சரியாக பயன்படுத்தி இருப்பார் இயக்குனர் ராஜமவுலி. இப்படம் 680கோடிகளை வசூலாக குவித்தது.
எந்திரன் 2.0 சூப்பர ஸ்டார் ரஜினிகாந்த் அக்சய் குமார் நடிப்பில் இயக்குனர் சஙனகரின் பிரம்மாண்டத்தில் உருவான படம் 2.0. இது முதலில் ரிலீசான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டது. சரவச அளவில் இப்படம் 800கோடிகளை வாரிக்குவித்தது.
பாகுபலி 2: பாகுபலி முதல் பாகத்தின் தொடருமாய் துவங்கிய கதை முதல் பாகத்தில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் ஏற்படுத்திய படம் பாகுபலி2. அகோரமாய் காட்டப்பட்ட அனுஷ்காவோ அழகிய தோரணையில் மிரட்டி இருப்பார். சர்வதேச அளவில் இப்படம் 1810கோடிகளை வசூலித்தது.