தமிழ் சினிமாவில் பல படங்கள் சரித்திரம் படைக்க கூடிய அளவிற்கு வெற்றிகரமாக ஓடி உள்ளன அந்த அளவிற்கு 365 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிய படங்களை பற்றி தற்போது பார்ப்போம்.
பயணங்கள் முடிவதில்லை
சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை. இந்த படத்தில் மைக் மோகன் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் நடித்திருந்தனர். 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் நாள் வெளியாகி கிட்டத்தட்ட 437 நாட்களுக்கு மேல் ஓடியது.
ஹரிதாஸ்
தியாகராஜ பாகவதர் மற்றும் டி ஆர் ராஜகுமாரி ஆகியோர் நடிப்பில் வெளியான ஹரிதாஸ் திரைப்படம் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
நெஞ்சத்தை கிள்ளாதே
மோகன் மற்றும் சுகாசினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே. இப்படம் கிட்டத்தட்ட 365 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
மூன்றாம் பிறை
பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான மூன்றாம் பிறை திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடித்தனர். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு தேசிய விருதும், இவர்கள் இருவருக்கும் தமிழ்நாடு தேசிய விருதும் கிடைத்தது. அதிலும் குறிப்பாக இப்படத்தில் இறுதியாக ரயில்வே காட்சியில் ஸ்ரீதேவியை பார்த்து இவர் கூறும் வசனம் எல்லாம் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
கிளிஞ்சல்கள்
மோகன் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் நடிப்பில் வெளியான கிளிஞ்சல் திரைப்படத்தை டி ராஜேந்தர் இயக்கியிருந்தார். இப்படம் மோகனுக்கு மிகப்பெரிய அளவில் பெரும் புகழை பெற்றுக்கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் இப்படம் 1 வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
ஒரு தலை ராகம்: தமிழ் சினிமாவில் ஒரு தலை ராகம் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை டி ராஜேந்திரன் இயக்கியிருந்தார். 1980 ஆம் ஆண்டு மே மாதம் 2 நாள் வெளியாகிய இப்படத்தில் ராஜேந்திரன், ஷங்கர் போன்றோர் நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த 1 வருடத்திற்கும் மேல் ஓடியது.
கிழக்கே போகும் ரயில், கரகாட்டகாரன் கங்கை அமரன் இயக்கத்தில் 1 வருடத்திற்கு மேல் ஓடியது, சின்னத்தம்பி திரைப்படம் பிரபு நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளியாகி கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் ஓடியது.
வசந்த மாளிகை திரைப்படம் 750 நாட்களும், பாட்ஷா திரைப்படம் 1 வருடமும், சந்திரமுகி திரைப்படம் 864 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.