தமிழ் சினிமா உலகில் சிலர் என்ன செய்தாலும் அத்தனை பெரிதாய் தெரியாது.
அப்படியாக சிலர் உச்சத்தில் இருந்து பெரிதாய் தெரிந்தும் இப்போது பெரிதாய் பா்க்க முடியாத சிலரை தோண்டி எடுத்து பார்ப்போம்.
அர்ஜுன்: ஆக்சன் கிங் அர்ஜுன் என அழைக்கப்படும் அர்ஜுன் ஒரு காலத்தின் ஓகோ என பேசப்பட்ட நடிகர்.
![arjun-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/06/arjun-cinemapettai.jpg)
ஜெண்டில் மேன் முதல்வன் உட்பட பல்வேறு ஹிட் படங்களை கொடுத்தவர். இவரது உடலமைப்பு மாற்றமே இவரது தனித்துவத்தை குறைத்து விட்டது.
சரத்குமார்: சுப்ரீம் ஸ்டார் எனப்படும் சரத்குமார் நாட்டாமை சூர்யவம்சம் என பல்வேறு ஹிட்களை 90களில் அள்ளித் தந்தவர் சரத்குமார்.
![sarathkumar-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/01/sarathkumar-cinemapettai.jpg)
நடிகை ராதிகாவை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். ஒரே நேரத்தில் பல்வேறு மாறுபட்ட செயல்களை செய்வதில் வல்லவர்.
திரைத்துறையில் பெரிய அளவில் இருந்த போதே திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்தவர். இப்படியாக சினிமா அரசியல் என இருந்தவர் இப்போது முழு நேரமும் அரசியலில் ஈடுபடுகிறார்.
நகுல்: நடிகர் நகுல் பாய்ஸ் படத்தில் அறிமுகமாகியவர் பல்வேறு நபர்களுக்கு அது நகுல் தானா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த படத்தில் தோன்றியவர்.
![nakkhul jaidev](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/05/nagul.jpg)
பிறகு “காதலில் விழுந்தேன்” “மாசிலாமணி” போன்ற சில வெற்றிகளை தந்தாலும் பெருமளவில் பேசப்படவில்லை.
சிவா: மிர்ச்சி சிவா என அழைக்கப்படும் சிவா தமிழ் படம் சென்னை 28 வணக்கம் சென்னை என சில படங்கள் நன்றாக ஓடினாலும் மக்களிடம் பெரிதளவான வரவேற்பு இல்லாத நடிகர்.
![radio-mirchi-siva](https://www.cinemapettai.com/wp-content/uploads/2018/10/radio-mirchi-siva.jpg)
சிரிக்க வைக்க எவ்வளவோ மெனக்கடும் அளவிற்கு நல்ல திறமையான நட்சத்திரமும் கூட இப்போது வரை காமெடிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களையே நடித்தும் வருகிறார்.
பரத்: பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி எம் மகன் கண்டேன் காதலை போன்று சில குடும்ப ஹிட்களை தந்தவர்.
![bharath-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/05/bharath-cinemapettai.jpg)
ஆக்சன் ஹீரோவாக அவதரிக்க நினைத்தவர் 6பேக்ஸ் உடன் 555படத்தில் தோன்றினார். பிறகு அவரின் தனித்துவம் தகர்க்கப்படவே பெருமளவிலான மார்க்கெட் இல்லாமல் போனது பரத்திற்கும்.