இணையத்தில் படம் பார்க்கும் கூட்டம் அதிகமாகிவிட்டது.
தியேட்டருக்கு சென்று பார்க்கிங்கிலிருந்து பாப்கார்ன் வரை பணம் செலவழிக்காது இருக்கு குடும்பங்கள் பலவும் ஆன்லைன் சேவையை அனுகிவரும் நிலையில் இல்லத்திலிருந்தே புதிய படங்களை பார்க்க ஏரளமான குடும்பங்கள் தயாராகி விடுகிறது.
இதிலும் குறிப்பாக இந்த முல் இரண்டாம் அலை கோவிட் ஊரடங்கு காலத்தில் திரைத்துறைக்கும் மக்கள் பொழுது போக்கிற்கும் ஓடிடி ரிலீஸ் முறை பயன்தந்ததை யாரும் மறுக்க முடியாது.
கலெக்சனை பெருமளவு அள்ள முடியாது எனினும் தேவையான கலெக்சனை படத்திற்கு படம் பெற்று வருகிறது. அப்படியாக அமேசான் ப்ரைம் நெட்ஃபிளிக்ஸ் சோனி லைவ் இவற்றில் காணக்கிடைக்கும் சில திரில்லர் தமிழ் படங்களை பட்டியலிட்டுள்ளோம்.
ராட்சசன்
விஷ்னு விசால் அமலாபால் கூட்டணியில் முண்டாசுப்பட்டி பட இயக்குனரின் அடுத்த படைப்பாக வெளிவந்த படம் ராட்சசன்.
தமிழ் தெலுங்கு என ஹிட்டடித்த படம் இப்போது இந்தியிலும் உருவாகி வருகிறது.

சைகோ செயின் கில்லர் படபடப்பு திரில்லிங் என அட்டகாசமான படம் இது .
கைதி
ஜெயிலில் இருந்து விடுதலையாகி வரும் கைதி கார்த்தி. போலிசார்கள் கலந்து கொண்ட ஒரு விருந்தில் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளையும் மயக்க நிலையில் ஆழ்த்த துடிக்கும் ஒரு கூட்டம்.

அந்த கூட்டத்திற்கு உதவி செய்யும் ஒரு காவலர். போலிசாரை காக்க நினைக்கும் அஞ்சாதே நரேன். அவர்களுக்காக போராடும் கார்த்தி என அத்தனையும் அசர வைக்கும்.
இவை எல்லாவற்றையும் கடந்து கதை ஒரே நாள் இரவில் நடப்பது போல் எடுக்கப்பட்டிருக்கும்.
8 தோட்டாக்கள்
நடிகர் ஷியாம் நடிப்பில் நீண்டகால இடைவெளிக்கு பின் வெளிவந்த படம் 8 தோட்டாக்கள். கொலைகாரனை தேடும் போலிசாரிடமிருந்து சேவை துப்பாக்கியை ஒரு திருடன் எடுத்துச்சென்றுவிட.

அதை ஒரு கொலைகாரன் வாங்கி ஒரு கொலைக்குற்றம் செய்துவிட அவனை பேபாலீசார் தேட என அத்தனையும் உணர்வை ஊர வைக்கும்.
இரும்புத்திரை
ஆன்லைனில் பணமோசடி அதனை தேடும் விசால் வில்லாதி வில்லனாக அர்ஜுன்.தேடுவதற்கு முன்பாகவே விஷாலை நோட்டமிடும் அர்ஜுன்.

அர்ஜுனை பிடிக்க பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுக்கும் விஷால் என கதையம்சம் சரியாக திரைக்கதையோடு ஒன்றி செயல்படும். சமூகத்தில் ஆன்லைன் வாயிலாக நடந்த பல்வேறு குற்றங்களை தோலுரித்த படம்.
பாபநாசம்
அழகான குடம்பம் சிக்கனமான வாழ்வு என இருந்தவர்களை ஒரு பணக்கார வீட்டு பையன் இந்த வீட்டு பெண்ணை அடைய நினைப்பதும். அதற்காக அவன்செய்கிற செயலும் என ஆரம்பித்தாலும் சரியான நேரத்தில் கதையை சரியான கோணத்தில் சென்று சேர்த்திருப்பார் இயக்குனர்.
மானத்திற்காக கவுதமியும் நிவேதாவும் பணக்கார வீட்டு பையனை கொலை செய்து புதைத்துவிட பல்வேறு படங்களை பார்த்து பழகிய கமலஹாசன் மாறுபட்ட கோணத்தில் கொலையை மறைக்க திட்டமிடுகிறார்.
குடம்பம் மொத்தத்தையும் அவரது இயக்கததில் அழகாக நடிக்க வைத்திருப்பார். சடலம புதைக்கப்பட்ட இடத்தில் பன்றியின் உடல் இருப்பது கதை திருப்பத்தின் உச்சம்.
கேம் ஓவர்
கேம் கிரியேட்டர் டாப்ஸி அவரோடு இருக்கும் அவர் வீட்டு பணிப்பெண் என கதாப்பாத்திரம் குறைவானாலும் வேறலெவல் திரைக்கதையில் மிரட்டல் காட்டி இருப்பார் இயக்குனர்.

விளையாட்டாக செய்தது வினையானது போல ஒரு செயின் கில்லரிடம் டாப்சி சிக்கிக்கொள்ள துவங்கிய விளையாட்டை கட்டாயம் விளையாட வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட டாப்சி விளையாட துவங்குகிறார்.
தப்பித்தாரா இல்லையா என்பதனை விருவிருப்பாக சொல்லி இருப்பார் இயக்குனர். மேன்கண்ட எல்லா கில்லர் த்ரில்லர் படங்கள் இப்போது ஆன்லைனில் காணக்கிடைக்கும்.