வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

டிவி சீரியலில் பட்டையை கிளப்பிய 5 நடிகைகள்.. முதலிடம் யாருக்குனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க.?

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பொழுதுபோக்கு என்றாலே சீரியல் தான். முதலில் பொழுதுபோக்காக இருந்த சீரியல் தற்போது பலருக்கும் மனநோயாளியாக மாறி விட்டது. தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தமிழில் டாப் 5 இடத்தைப் பிடித்த சீரியல் நடிகைகளைப் யார் யார் என்பதை வெளியிட்டுள்ளது.

செம்பருத்தி: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற சீரியல் செம்பருத்தி .செம்பருத்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷபானா ஷாஜகான் நடிப்பு தான் வெற்றி அடைவதற்கு காரணமாய் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஷாபனா ஷாஜகானுக்கு தமிழ் ரசிகர்களின் வரவேற்பால் 5வது இடம் கிடைத்துள்ளது.

shabana shajahan cinemapettai
shabana shajahan cinemapettai

பாக்கியலட்சுமி: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி தற்போது வரவேற்பு பெற்ற சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி சீரியல் தான். குடும்பத்திலுள்ள இல்லத்தரசிகளின் வாழ்வியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த சீரியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் இல்லத்தரசியாக நடித்திருக்கும் கே எஸ் சுஜித்ரா ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளார்.

suchitra cinemapettai
suchitra cinemapettai

ரோஜா: ஒரு காலத்தில் சீரியலில் முன்னிருந்த சன் டிவி தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் நடித்து பிரபலமடைந்தவர் ரோஜா. இந்த சீரியலில் கதாநாயகன் அர்ஜுனுடன் ரோஜா செய்யும் ரொமன்ஸ் காட்சிகள் மூலம் இந்த சீரியல் ரசிகர்களிடம் பிரபலமடைந்தது.

roja cinemapettai
roja cinemapettai

பாண்டியன் ஸ்டோர்ஸ்: குடும்ப பாசத்தை கண்ணுக்குள் கொண்டுவரும் சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான்.இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜே சித்ராவின் நடிப்பு தான் பாண்டியன் ஸ்டோர் சீரியல் வெற்றி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. தற்போது இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து சித்ராவை போல ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகிறார். காவியா அறிவுமணி தான் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

pandya store cinemapettai
pandya store cinemapettai

பாரதி கண்ணம்மா: சமீபகாலமாக பல இல்லத்தரசிகள் அடிமையாக வைத்திருக்கும் சீரியல் என்றால் அது பாரதிகண்ணம்மா சீரியல் தான். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஹரிபிரியனுக்கு ஏராளமான இல்லதரசிகள் ரசிகர்களாக உள்ளனர்.

roshni haripriyan cinemapettai
roshni haripriyan cinemapettai

அதிலும் குறிப்பாக கதாநாயகி கண்ணை உருட்டி உருட்டி நடிக்கும் காட்சிகள் அனைத்துமே சமூகவலைதளங்களில் கேலியும் கிண்டலுமாக வெளியாகி இந்த சீரியலுக்கு என்று தனி மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சீரியலில் நடித்த ரோஷினி ஹரிப்ரியன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

Trending News