வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

கதை நன்றாக இருந்தும் ஓடாமல் போன 6 திரைப்படங்கள்.. பாவம் விதார்த்துக்கு மட்டும் 2 படம்!

மற்ற மொழிகளில் கதை நன்றாக இருந்தால் படம் பிளாக்பஸ்டர் வசூல் செய்கிறது. ஆனால் தமிழ் சினிமாவுக்கு மட்டும் யார்விட்ட சாபமோ தெரியவில்லை, கதை நன்றாக இருக்கும் படங்கள் எதுவுமே வெற்றி பெறுவதில்லை. அந்த வகையில் 6 படங்களை பற்றி தான் பார்க்க போகிறோம்.

2017 ஆம் ஆண்டு விதார்த் மற்றும் பாரதிராஜா நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் தான் குரங்கு பொம்மை. எளிமையாக விறுவிறுப்பாக கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாமல் போனது.

அதேபோல் 2019ஆம் ஆண்டு வெற்றி என்பவர் நடிப்பில் உருவான திரைப்படம் ஜிவி. இந்த படத்தில் கருணாகரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படம் வெளியானபோது கண்டுக்க ஆளில்லை. ஆனால் அதன்பிறகு படம் சூப்பராக இருப்பதாக சமூகவலைதளத்தில் கருத்துக்கள் வெளிவந்தது.

அதைப்போல் 2016ஆம் ஆண்டு சித்தார்த் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான திரைப்படம் தான் குற்றமே தண்டனை. இந்தப் படத்தின் கதையும் மிக அருமையாக இருப்பதாக விமர்சனங்கள் வந்தது. ஆனால் தியேட்டரில் சென்று பார்க்கத்தான் ஆளில்லை.

2017 ஆம் ஆண்டு வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோரின் நடிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் 8 தோட்டாக்கள். இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சோபிக்கவில்லை.

முருகதாஸின் அசிஸ்டெண்ட் டைரக்டர் சந்தோஷ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு அதர்வா மற்றும் கேத்தரின் தெரேசா நடிப்பில் வெளியான திரைப்படம் கணிதன். இந்த படமும் விமர்சன ரீதியாக மட்டுமே வரவேற்பைப் பெற்றது.

அதேபோல் நல்ல நடிகர் என பெயர் எடுத்து வைத்துள்ள அட்டகத்தி தினேஷ் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. இந்த படம் விமர்சகர் ரீதியாக பெற்ற வரவேற்பை விட வசூல் ரீதியாக பெற்ற வரவேற்பு குறைவுதான்.

இதுபோல சினிமாவில் இன்னும் ஏகப்பட்ட படங்கள் கதை திரைக்கதை போன்றவை சூப்பராக இருந்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் போய்விட்டது. இதற்கு காரணம் மாஸ் படங்கள் தான் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

underrated-movies
underrated-movies
- Advertisement -spot_img

Trending News