ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

சர்ச்சையை கிளப்பி பஞ்சாயத்தை கூட்டிய A படங்கள்.. கண்டிப்பாக பாருங்கள்

என்னதான் ஆங்கிலப் படங்களில் ரொமான்டிக் காட்சிகள் இருந்தாலும் தமிழ் படங்களில் இருப்பதைப் போன்று டெம்பர் ஏற்றும் காட்சிகள் குறைவுதான். அப்படி வெளிவந்த இளைஞர்களை கட்டிப்போட்ட திரைப்படங்களில் லிஸ்டை பார்ப்போம்.

சிந்து சமவெளி:

2010-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சாமி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் அமலா பால் மற்றும் ஹரிஷ் கல்யாண் அறிமுகமானார்கள். இத்திரைப்படத்திற்கு வயதுவந்தவர்களுக்கு (A)மட்டும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாமனாருடன் உறவு கொள்ளும் மருமகளை பற்றிய கதை.

வேலு பிரபாகரன் காதல் கதை:

காதல் ஒருமுறைதான் மலரும் என்று சின்ன வயதில் நான் நம்பினேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் அனுபவங்கள்தான், ‘காதல் கதை’ படமாக மலர்ந்துள்ளது. இளைஞர்கள் மட்டும் பார்க்கக்கூடிய இந்த படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கிடைத்தது.

தேவலீலை:

200 ஆண்டுகள் பின்னோக்கி எடுக்கப்படும் திகில் கலந்த மாயாஜால சினிமாவான ‘தேவலீலை’. முனிவர் காலத்து ரொமான்டிக் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியீட்டு வசூல் பார்த்தனர்.

இருட்டு அறையில் முரட்டு குத்து:

ஒரு பேய் ஒரு இளைஞனுடன் உறவு கொள்ள வேண்டும் என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு காமெடி கலந்த அடல்ட் மூவி ஒன்றை எடுத்து பெரிய ஹிட் கொடுத்து உள்ளனர். இந்த படத்தை முழுக்க முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்து இருந்ததால் இந்த படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுக்கப்பட்டது.

மன்மத லீலை:

1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஆலம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை அனைவருடனும் உறவு கொள்ளும் இளைஞன், திருமணத்திற்கு பிறகும் அப்படியே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடையும் மனைவி தன்னுடைய வீட்டில் வேலைக்காரியுடன் தன்னுடைய தந்தை நடத்தும் கூத்தை அறிந்த பிறகு மீண்டும் கணவருடன் சேர்ந்து திருந்தி வாழ்வதை போன்ற கதை. இந்தப்படத்திற்கு அப்போதே ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது.

சோக்காலி:

சோனாவின் குடும்பத்தில் ஒருவர் ஏமாற்றப்படுவதும், இதற்காக சோனா பழி வாங்குவதுமே சோக்காலி படத்தின் கதை. இப்படத்தில் சோனா கவர்ச்சியாக நடித்துள்ளார். அரை குறை ஆடையில் மயக்கி பழி தீர்ப்பதாகக் கதை போகிறது. படுக்கையறைக் காட்சிகள் எல்லாம் உண்டாம்.

வாலிபமே வா வா:

கவர்ச்சி நாயகி கிரண் நடிப்பில் உருவாகிய அடல்ட் திரைப்படம். சாப்ட்வேர் என்ஜினியராக இருக்கும் கிரன் நாயகனின் மோக எண்ணத்தை புரிந்து கொள்ளாமல் நட்பாக பழகி பின் மோக கடலில் மூழ்குவது தான் இந்த படத்தின் கதை.

பால்காரி:

தமிழ் சினிமாவில் வந்த அடல்ட் மூவி திரைப்படங்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த திரைப்படம் இந்த பால்காரி. அளவுக்கதிகமான கிளாமர் காட்சிகள் இருப்பதால் இந்த படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுக்கப்பட்டது. மாடுகளைப் பற்றி எப்படி காப்பாற்ற வேண்டும் என்ற பொது நோக்கத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News