வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஆதியை அப்பாவாக ஏற்க மறுக்கும் தமிழ்.. துடிக்கும் இரு இதயம், பாரதி எடுக்கப் போகும் முடிவு என்ன?

Zee Tamil Idhayam Serial: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற இதயம் சீரியல் மூலம் தான் அந்த சேனலில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெற்றிருக்கிறது. மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று பார்ப்பவர்களை அடிமையாக்கி விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த நாடகத்தில் இருக்கும் கதைகள் ரொம்பவே எதார்த்தமாகவும், பார்ப்பதற்கு உணர்வுபூர்வமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.

அதாவது பாரதி காதலித்து வீட்டை எதிர்த்து ஆதியை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுடைய வாழ்க்கை ரொம்பவே சந்தோஷமாகவும் பாசங்களை நிரப்பிய குடும்பமாகவும் போய்க்கொண்டிருக்கிறது. இவர்களுக்கு தமிழ் என்று ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பிறகு இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் பொழுது திடீரென்று ஏற்பட்ட விபத்தினால் வாசு இறந்து விடுகிறார்.

அதே சமயம் இன்னொரு பக்கம் ஹீரோவாக வரும் ஆதிக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. இந்த நேரத்தில் இவருக்கு இதயம் அறுவை சிகிச்சை பண்ண வேண்டும் என்பதால் மருத்துவர்கள் வாசுவின் இதயத்தை ஆதிக்கு பொறுத்து விடுகிறார்கள். அதன் பின் பாரதி மற்றும் தமிழை பார்க்கும் பொழுதெல்லாம் ஆதிக்கு இதயம் லப்டாப் என்று துடித்து ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.

Also read: சைடு கேப்பில் மகனுக்கு தோள் கொடுக்கும் பூமர் அங்கிள்.. பாக்யாவை ஓவர் டேக் செய்யும் கோபி

அத்துடன் எதிர்பார சூழ்நிலையில் ஆதியின் கம்பெனியில் வேலை பார்க்கும் நிலைமை பாரதிக்கு வருகிறது. அப்பொழுது அடிக்கடி ஆதி பாரதியை சந்திக்கும் பொழுது அவருக்கு காதல் உணர்வு ஏற்படுகிறது. மேலும் காதலையும் தாண்டி தமிழ் மீது ஒரு பொறுப்பான அப்பாவாகவும் பாசத்தையும் காட்டி வரும் கதையாக நகர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஆதிக்கு வீட்டில் ஒரு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு நடக்கிறது. ஆனால் ஆதி தாலி கட்டும் நேரத்தில் நான் வேறொரு பெண்ணை காதலிக்கிறேன் என்று திருமணத்தை நிப்பாட்டி விடுகிறார். இதனைத் தொடர்ந்து ஆதி தன்னுடைய மனதில் ஏற்பட்ட காதலை பாரதியிடம் தெரிவித்து விடுகிறார். பாரதிக்கும் ஆதி மேல் ஒரு அபிப்பிராயம் இருந்தாலும் தயக்கத்துடனே ஆதியை விட்டு விலக நினைக்கிறார்.

அடுத்ததாக ஆதிக்கும் தமிழுக்கும் நல்ல ஒரு உறவு ஏற்பட்டு விடுகிறது. இதனால் ஆதி, தமிழ் என்னை அப்பாவாக ஏற்றுக் கொண்டால் உங்களுக்கு சம்மதம் தானே என்று பாரதியிடம் கேட்கிறார். அதற்கு பாரதி, நிச்சயமாக தமிழ் வாசுவை தவிர யாரையும் அப்பாவாக ஏற்க மாட்டார் என்று பிடிவாதமாக சொல்லிவிடுகிறார். இனி அடுத்து தமிழ் எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்கப் போகிறது. பாரதி ஆதி இருவரும் ஒன்று சேருவார்களா என்பது உணர்வுபூர்வமான கதையுடன் நகர்ந்து வருகிறது.

Also read: ஜனனி அப்பத்தாவுடன் சம்பந்தம் வைக்கப் போகும் குணசேகரன்.. நாரதர் வேலையை பார்க்கும் முட்டாள் பீஸ்

Trending News