தேர்தலில் நெருங்கியதையடுத்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல நாட்களாக மக்களை கண்டு கொள்ளாமல்லிருந்த அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் நெருங்குவதால் இன்னும் ஐந்து ஆண்டு காலம் எப்படியாவது ஆட்சி செய்ய வேண்டுமே என ஆசைப்பட்டு மக்களுக்கு நல்லது செய்வது போல் தொடர்ந்து மக்களை நேரில் சந்தித்து தங்களது பிரச்சாரங்களை பரப்பி வருகின்றனர்.
அந்த வரிசையில் எடப்பாடிபழனிச்சாமி மற்றும் ஸ்டாலின் உட்பட சீமான் வரை அனைத்து கட்சி தலைவர்களும் மக்களை நேரில் சந்தித்து தங்களது கொள்கைகளை பரப்பி வருகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையம் வருகிற சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 தேதி நடைபெறுவதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதையடுத்து பல கட்சித் தலைவர்கள் தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளதால் வேகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் இன்னும் ஒரு சில வாரங்களுக்கு பிறகு தேர்தல் ஆணையம் எந்த ஒரு பிரச்சாரம் செய்யக்கூடாது கட்சிக்கொடி போன்றவற்றை மக்கள் மத்தியில் காட்டக் கூடாது என்பதை கடந்த ஆண்டு தேர்தல் போல் இந்த ஆண்டு தேர்தலில் நடைமுறைப்படுத்த உள்ளனர்.
தற்போது ஆரம்ப கட்டமாக தேர்தல் ஆணையம் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்பவர்களுக்கு சரியான ஆவணங்களை காட்டினால் மட்டுமே பணத்தை கொடுக்கப்படும் என்றும், சரியான ஆவணங்கள் இல்லை என்றால் அதனை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடும் என அறிவித்துள்ளது.
இந்த தகவலை அறிந்த சமூக வலைதள நெட்டிசன்கள் கிண்டலாக ஒருசில புகைப்பட செய்திகளை வெளியிட்டு இணையதளத்தில் வைரலாக வருகின்றனர். ஆனால் இதைவிட தேர்தலில் அனைவரும் ஓட்டு போடுவது முக்கியம் என்பதை உணர வேண்டும்.