வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இப்ப வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்.. நம்பி மோசம் போயிட்டோமே!

எட்டு வருடங்களுக்குப் பிறகு தல, தளபதி இருவரும் திரையில் மோதிக்கொண்ட துணிவு மற்றும் வாரிசு படங்களின் வசூல் விவரம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் யார் நம்பர் ஒன் என்பதை தெரிந்து கொள்ள அஜித் மற்றும் விஜய் இருவரின் ரசிகர்களும் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

ஆனால் வசூல் விவரத்தை ஒரே வாரத்தில் வெளியிட்டு யார் முன்னிலை என தெரியப்படுத்தும் சென்னை ரோகினி திரையரங்கம் இதுவரை துணிவு தான் வசூலில் நம்பர் ஒன் என்றும் இரண்டாவது இடம் வாரிசுக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதை நம்பி அஜித் ரசிகர்கள் குத்தாட்டம் போட்ட நிலையில், இப்போது உண்மையான வசூல் விபரம் வெளியாகி அவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

Also Read: பாலிவுட்டை விட 5 தமிழ் படங்களின் மூலம் கல்லாகட்டிய போனி கபூர்.. கம்மி பட்ஜெட்டில் பெத்த லாபம்

இருப்பினும் வாரிசு, துணிவு படங்களுக்கான வசூல் போட்டி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. தற்பொழுது வாரிசு படத்திற்கு குடும்பங்கள் பார்க்கும் படமாக மாறி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் வாரிசு 100 கோடியை தாண்டியது. துணிவு 90 கோடியை தாண்டி உள்ளது என தகவல் வந்துள்ளன. இதை வைத்துப் பார்த்தால் தமிழகத்தில் நம்பர் ஒன் விஜய் தான் என்பது தெரிய வருகிறது.

உலக அளவில் இரண்டு படங்களும் வசூலில் 15 கோடி அளவில் மட்டுமே இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே எங்கு பார்த்தாலும் துணிவு மற்றும் வாரிசு படத்தை குறித்த பேச்சு தான். ஆனால் பலரும் எதிர்பார்த்ததற்கு மாறாக இரண்டு படங்களின் வசூலும் மந்தமாக இருக்கிறது.

Also Read: வலிமை கிளைமேக்ஸை ஹைதராபாத் என்கவுண்டருடன் சம்பந்தப்படுத்திய ஹெச். வினோத்.. அதிர வைக்கும் பேட்டி

அதிலும் வாரிசு மற்றும் துணிவு போன்ற இரண்டு படங்களுக்கும் வெறும் 10 கோடி வித்தியாசம் மட்டுமே இருப்பதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் இரண்டு படங்களின் வசூல் விவரம் மீண்டும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இருப்பினும் தமிழகத்தில் மட்டும் வாரிசு, குடும்ப செண்டிமெண்ட் படமாக வெளியாகி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேமிலி ஆடியன்ஸை கவர்ந்து 100 கோடியை வசூலித்திருப்பதும், அதே சமயம் இளசுகள் விரும்பும் வகையில் ஆக்சன் படமாக வெளியான துணிவும் 90 கோடியை தமிழகத்தில் குவித்திருப்பது அவர்களுடைய ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கெத்து காட்டுகின்றனர்.

Also Read: வீடு ஏறி சென்றும் வர மறுத்த அஜித்.. விஜயகாந்தை ஒரு நொடியில் கண்கலங்க வைத்த AK

Trending News