TVK-Vijay: பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று நடந்து முடிந்திருக்கிறது. இதுதான் தற்போது தமிழ்நாட்டின் பரபரப்பு செய்தியாக மாறி இருக்கிறது. விஜய் அப்படி என்ன பேசி விடப் போகிறார் என்பதுதான் மாநாட்டிற்கு முந்தைய மனநிலையாக இருந்தது.
ஆனால் தற்போது அவருடைய பேச்சு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. திராவிட மாடலில் தொடங்கி மோடி மஸ்தான், பாசிசமா பாயாசமா என அவரின் அனல் பறக்கும் பேச்சுக்கு தொண்டர்கள் மத்தியில் பலத்த கரகோஷம் எழுந்தது.
அதேபோல் கட்சியின் கொள்கை என்ன தன்னுடைய அரசியல் யாரை எதிர்த்து என்பதையும் அவர் தெளிவாக குறிப்பிட்டார். அதே சமயம் அநாகரிகமான பேச்சுக்கு இங்கு இடம் கிடையாது. யாரையும் தாக்கி பேசவும் நாங்கள் வரவில்லை.
மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவருடைய நிலைப்பாடும் தற்போது வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அவர் பேச ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ஒவ்வொரு வார்த்தையும் சிங்கத்தின் கர்ஜனையாக இருந்தது.
விஜய்க்கு மக்கள் ஆதரவு உண்டா.?
இதுவே இந்த மாநாட்டின் வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது தமிழக மக்களின் மனநிலை என்ன என்பதையும் பார்ப்போம். நேற்று அவருடைய உரை ஆரம்பித்த நிமிடத்தில் இருந்து சோசியல் மீடியாவில் கமெண்ட்டுகள் பறக்க ஆரம்பித்தது.
தற்போது முழுதாக அவருடைய பேச்சை கேட்ட மக்கள் நிச்சயம் ஒரு மாற்றம் வர வேண்டும் என கூறி வருகின்றனர். பேச்சில் மட்டுமில்லாமல் செயலிலும் இருந்தால் நிச்சயம் ஒரு வலுவான கட்சி தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் என்பதும் பொதுமக்களின் எண்ணமாக இருக்கிறது.
தற்போது விஜய்க்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் எதிர்ப்புகளும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் 2026 தான் என்னுடைய இலக்கு என்பதை அவர் தெளிவாகவும் உறுதியாகவும் சொல்லிவிட்டார்.
அதை எப்படி செயல்படுத்த போகிறார் என்பதுதான் ஆர்வம் கலந்த கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால் தமிழகத்தை பொறுத்தவரையில் பழம் தின்னு கொட்டை போட்ட முக்கிய கட்சிகள் ஆலமரமாக இருக்கின்றன. இதை எதிர்த்து விஜய் வாகை சூடுவாரா என்பதை வரும் தேர்தலில் காண்போம்.