வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லிப் லாக், டேட்டிங் என அந்த மாதிரி மயக்கத்தில் இருக்கும் தமன்னா.. இணையத்தில் லீக்கான புகைப்படம்

கல்லூரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமான தமன்னா, அதன்பிறகு அஜித், சூர்யா, விஜய் என டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது தமிழில் தமன்னாவிற்கு படங்கள் குறைய துவங்கியதும், வெப் சீரிஸ்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் ஆரம்பத்தில் இருந்தே தளபதி விஜய் உடன் தமன்னா தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டார். இவர் மட்டுமல்ல அவர் சேர்ந்து நடிக்கும் எல்லா நடிகர்களும் தமன்னா மீது கிரஷ் உடன் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் டீலில் விட்டு விட்டு கடைசியில் அம்மணி பாலிவுட் வில்லன் நடிகரிடம் சிக்கிவிட்டார்.

Also Read: ஒரு கோடி சம்பளம் கொடுத்தது சும்மாவா.. தமன்னாவிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இயக்குனர்

நடிகை தமன்னா வில்லன் நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங்கில் இருக்கிறார். இவருக்கு முன்பே பையா படத்தில் தமன்னாவுடன் இணைந்து நடித்த கார்த்தி, அவர் பின்னாடியே சுற்றி வந்தார். ஆனால் அப்படிப்பட்ட ரொமான்டிக் ஹீரோக்களுக்கு எல்லாம் டிம்கி கொடுத்துவிட்டு இப்போது மும்பையில் வில்லன் விஜய் வர்மாவுடன் டேட்டிங், டின்னர், அவுட் என அந்த மாதிரி மயக்கத்தில் ஒயிட் பியூட்டி சுற்றி வருகிறார்.

அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவுடன் பார்ட்டியின் லிப்லாக் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தியும் வெளியானது. இது குறித்து பேட்டி ஒன்றில் கேட்டதற்கு தமன்னா விஜய் வர்மாவுடன் நான் தொடர்ந்து காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறேன்.

Also Read: பொது இடத்தில் போடவேண்டிய டிரஸ்ஸா இது? தமன்னா அட்டகாசம்

நாங்கள் படத்தில் ஒன்றாக நடித்தோம் அவ்வளவுதான். அவர் மீது எனக்கு காதல் இல்லை என்று கூறினார். ஆனால் அவர் சொன்னதெல்லாம் அப்பட்டமான பொய் என்பது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏனென்றால் விஜய் வர்மாவுடன் தமன்னா நைட் டேட்டிங் செய்துவிட்டு நட்சத்திர விடுதியில் இருந்து வெளியே வந்து, அவருடன் காரில் சென்ற வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக பரவுகிறது.

இதைப் பார்த்து நெட்டிசன்கள் அப்போது லிப் லாக், இப்போ நைட் டேட்டிங்கா! இல்லை இல்லைன்னு சொல்லிவிட்டு இஷ்டத்திற்கு திரிகிறீர்களே என்று இந்த ரகசிய காதல் ஜோடிகளை குறித்து கமெண்ட் செய்கின்றனர். மேலும் நடிகை தமன்னாவும் நடிகர் விஜய் வர்மாவும் தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் 2ம் பாகத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா

thamannah-cinemapettai
tammannah-cinemapettai

Also Read: விஜய் சேதுபதிக்கு தான் அந்த வேலைனா.. தமன்னாவும் அதையே செய்கிறாரே.. காலக்கொடுமை

Trending News