திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தன் இனத்தைக் காப்பாற்ற மிருகமாக உருமாறி நிற்கும் தங்கலான்.. ரிலீஸ் தேதியுடன் மிரட்டும் போஸ்டர்

Thangalaan-Vikram: பா ரஞ்சித், விக்ரம் கூட்டணியில் பல மாதங்களாக பார்த்து பார்த்து செதுக்கப்பட்டு வந்த தங்கலான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்களுக்கு நடந்த கஷ்டங்களை பற்றிய கதையாக இது உருவாகி வருகிறது. 18ஆம் நூற்றாண்டு சம்பவமான இதில் இதுவரை சொல்லப்படாத பல சம்பவங்கள் இருப்பதாலேயே தங்கலான் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் விக்ரமின் தோற்றம் வேற லெவலில் இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த சூழலில் இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து குஷியான ரசிகர்கள் அந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்து வந்த நிலையில் பலரும் எதிர்பார்த்த அப்டேட்டும் வெளிவந்துள்ளது.

தன் இனத்தைக் காப்பாற்ற மிருகமாக நிற்கும் தங்கலான்

vikram-thangalaan
vikram-thangalaan

அந்த வகையில் மாத கணக்கில் விக்ரமின் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த தங்கலான் அடுத்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளிவர இருக்கிறது. போராட்ட களத்தை மையமாகக் கொண்ட இப்படம் இந்த நாளில் வெளிவருவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. அதேபோன்று நவம்பர் 1ம் தேதி டீசர் வெளியாகும் என்ற அறிவிப்பும் அதில் இடம்பெற்றுள்ளது.

மேலும் அந்த போஸ்டரில் விக்ரமின் கெட்டப் வெறித்தனமாக இருக்கிறது. தலை நிறைய நீண்ட முடி, தாடி, கையில் கம்பு, முகத்தில் ரௌத்திரம் என படுபயங்கரமாக அவர் காட்சியளிக்கிறார். அவருக்குப் பின்னால் பலர் கையில் ஆயுதங்களோடு நிற்கின்றனர். அதற்கும் பின்னால் குதிரையில் பலர் துரத்தி வருவது போன்று போஸ்டர் அமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி விக்ரம் நிற்கும் இடம் ரத்த களரியாகவும் காட்சி அளிக்கிறது. இது தங்களுக்கான உரிமையை மீட்டெடுக்க நடக்கும் போராட்டத்தில் மக்கள் எந்த அளவுக்கு ரத்தம் சிந்தி இருப்பார்கள் என்பதை குறிக்கும் வகையிலும் இருக்கிறது. இப்படி மொத்தமாக உருமாறி வெறித்தனமான சம்பவத்திற்கு காத்திருக்கும் விக்ரமுக்கு தங்கலான் அடுத்த வருடத்தின் சிறந்த ஓப்பனிங் ஆக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மொத்தமாக உருமாறி வெறியோடு காத்திருக்கும் விக்ரம்

thangalaan-poster
thangalaan-poster

Trending News