சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கவர்ச்சி காட்ட நான் ரெடி! வாய்ப்பு கொடுக்க நீங்க ரெடியா? இம்சைப்படுத்தும் சந்தானம் பட நடிகை

திரையுலகில் சில நடிகைகள் வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்கவில்லை என்றாலும் அவர்களின் கோட்பாட்டில் இருந்து விலகுவதில்லை. ஆனால் ஒரு சில நடிகைகள் பட வாய்ப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள். அதற்கான அரை நிர்வாணம் முதல் பிகினி வரை விதவிதமான போட்டோ ஷூட்களை எடுத்து சோஷியல் மீடியாவில் தெறிக்க விடுவார்கள். அப்படி ஒரு நடிகையை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

அவர் வேறு யாருமல்ல நம்ம நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான நம்பர் ஒன் அதாவது A1 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை தாரா அலிஷா பெர்ரி தான். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சந்தானத்துடன் ஏ1 மற்றும் பிஸ்கோத்து உள்ளிட்ட படங்களில் மட்டுமே நடித்து உள்ளார். பெரிய அளவில் பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் பட வாய்ப்பிற்காக அனைத்து நடிகைகளும் கையில் எடுக்கும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை தாராவும் எடுத்துள்ளார்.

தாரா அடிப்படையில் ஒரு மாடல் என்பதால் இவரின் போட்டோ ஷூட் வேற லெவலில் இருக்கும். சமீபத்தில் பிகினி உடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் இணையத்தில் பயங்கர வைரலானது. ஏ1 படத்தில் ஐயர் வீட்டு பெண்ணாக அடக்கமாக வந்த நடிகையா இப்படி அரைகுறை ஆடையுடன் வலம் வருகிறார் என ரசிகர்கள் வாயடைத்து பார்த்தார்கள்.

tara-santhanam-A1
tara-santhanam-A1

மாடல் அழகினா சும்மாவா என்னும் அளவிற்கு இவரது புகைப்படங்கள் தரமாக இருக்கும். தற்போது புதிய பட வாய்ப்பிற்காக பிகினியில் போட்டோ எடுத்து பதிவிட்டு வரும் தாரா கவர்ச்சி காட்ட நான் ரெடி வாய்ப்பு கொடுக்க நீங்க ரெடியா என இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தூது விடுவது போலவே உள்ளது. அப்போ சீக்கிரம் பட வாய்ப்பு கிடைச்சிடும் போலவே…..

Trending News