தமிழ்நாட்டில் எப்போது பள்ளிகள் திறக்கும் என ஒரு பக்கம் மாணவர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் ஒரு சில ஆசிரியர்கள் கேவலமாக நடந்து கொள்வதால் இனிமேல் பள்ளிக்கு போக வேண்டாம் என்ற அளவிற்கு மாணவர்களை முடிவெடுத்துள்ளனர்.
சமீபகாலமாக தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை ஆன்லைன் மூலம் சொல்லித் தருவதை தவிர மற்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தாலும் இன்னும் இந்த மாதிரி குற்றம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மாணவிகளுக்கு பா**யல் தொல்லை கொடுத்ததாக ராஜகோபாலன் என்ற பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். பிரபல நடிகரான YG மகேந்திரன் இந்த பள்ளிக்கூடத்தில் பொறுப்பில் இருப்பதாக தெரிகிறது.
இதனை பார்த்த ஒரு சிலர் இந்த ஆசிரியருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழச்சி குரல் கொடுத்து வருகின்றனர். பாமக உறுப்பினர் ராமதாஸ் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
காவல்துறையினர் ஜெயலட்சுமி தற்போது நேரில் சென்று விசாரணை செய்து வருகிறார். இந்த ஆசிரியர் மீது பலரும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தது மட்டும் இல்லாமல் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
பள்ளி நிர்வாகம் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று ஒருபுறம் கூறினாலும், ஆசிரியரே உடனடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதனால் காவல்துறையினருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் விரைவில் விசாரித்து உரிய தண்டனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.