வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

குறி வச்சா இறை விழனும்.. பிறந்தநாள் பரிசாக தலைவர் 170 டைட்டிலுடன் தெறிக்கவிட்ட டீசர்

Rajini In 170 Movie Teaser and Title: ரஜினியின் ஜெயிலர் படத்தின் வெறித்தனமான வெற்றிக்குப் பிறகு 170 ஆவது படத்தை ஜெய் பீம் இயக்குனரான டிஜே ஞானவேலுடன் கமிட்டானார். இந்த வயதிலும் இவருக்கு சுக்கிர திசை அடிக்கிறது என்பதற்கு ஏற்ப தாறுமாறான வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்த படமும் விருது வாங்கும் அளவிற்கு இயக்குனரை தேடிப் பிடித்து விட்டார்.

அந்த வகையில் இன்று இவருடைய 73 வது பிறந்த நாளை ஒட்டி படத்தின் டைட்டில் மற்றும் டீசரை வெளியிட்டு விட்டார்கள். இந்த டீசரை பார்க்கும் பொழுது வழக்கம்போல் இவருடைய ஸ்டைலில் கிளாஸ் கண்ணாடியை போட்டுவிட்டு “குறி வச்சா இறை விழனும்” என்று கெத்தாக தெறிக்க விடும் டயலாக் அனைத்து ரசிகர்களையும் புல்லரிக்கும் வகையில் சும்மா தெறிக்க விட்டிருக்கிறார்.

அத்துடன் தொடக்கத்திலேயே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புத்தகத்தை படித்துக் கொண்டிருப்பது மற்றும் ஆக்ஷன்காக களம் இறங்கி லத்தியுடன் ஜெயில் காவலராக வருகிறார். அத்துடன் இப்படத்தின் டைட்டிலை வேட்டையன் என்று வைத்திருக்கிறார். வேட்டையன் என்றால் எந்த அளவிற்கு வேட்டையாட போகிறார் என்பதை காட்டும் விதமாக சூறாவளியாக படம் பட்டையை கிளப்ப போகிறது.

Also read: காமெடி டிராக்கை ஓட்டி வந்த ரஜினியின் 5 படங்கள்.. ரெண்டு பொண்டாட்டி இடம் மாட்டி தவித்த வீரா

அந்த வகையில் அடுத்த ஆண்டும் ரஜினி மற்ற நடிகர்களை விட மாஸ் காட்டப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. எத்தனையோ நட்சத்திரங்கள் திரை வானில் பிரதிபலித்தாலும் எப்பொழுதுமே மக்கள் மனதில் நிலைத்து நிற்பது ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்து நடிப்பை பின்னிப் பெடல் எடுத்து வருகிறார்.

அத்துடன் எத்தனையோ பாடல் வரிகள் இவருக்கு பொருத்தமாக இருந்தாலும் தற்போது இந்த வரிகள் சொன்னால் சரியாக இருக்கும். வீரத்தில் மன்னன் நீ, வெற்றியில் கண்ணன் நீ, என்றுமே ராஜா நீ… உண்மைக்கு பேர் சொல்லும் மனிதனே, நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞன் என்று சொல்லும் அளவிற்கு வெற்றி நடை போட்டு வருகிறார்.  மேலும் வழக்கம்போல் இப்படத்திற்கும் அனிருத் அவருடைய இசையை தாறுமாறாக தெறிக்க விடுகிறார். குறிப்பாக குறி வச்சா இறை விழனும் என்று சொல்லும்போது பின்னணியில் கழுகு வேட்டை சத்தத்தை வைத்த அனிருத் அங்கு தான் நிக்கிறாரு.

ஆக மொத்தத்தில் அடுத்த வருடம் தரமான சம்பவம் காத்துக் கொண்டிருக்கிறது. இப்படத்தை லைக்கா நிறுவனமான சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரம் பகுதியில் முடிவடைந்துவிட்டது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. அங்கே அமிதாப்பச்சன் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Also read: பைத்தியக்கார பட்டத்தில் இருந்து ரஜினியை காப்பாற்றிய 3 பிரபலங்கள்.. 1000 படத்திற்கும் மேல் நடித்த ஒரே நடிகை

- Advertisement -spot_img

Trending News