சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

போதை, குடி இல்லனா மதிக்க மாட்டாங்க.. வாய்ப்பு பறிபோனதால் விரக்தியில் பேசிய வில்லன் நடிகர்

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் இவரது முகத்தையும்,நடிப்பையும் பார்த்தால் வில்லன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு நடிகர் ஆனந்த் ராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் பல திரைப்படங்களில் நடித்து அசத்தியவர்.

ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார், பார்த்திபன், விஜய், அஜித் என பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்த நடிகர் ஆனந்த் ராஜ் அண்மையில் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும் வலம் வருகிறார்.

Also Read : சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த அர்ஜுன்.. வேறு வழி இல்லாமல் மொக்க ஹீரோவை போட்ட தயாரிப்பாளர்

நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நகைச்சுவை வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்த நடிகர் ஆனந்த் ராஜ் சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படத்தில், துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனிடையே அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய அவர், மது அருந்தும் பழக்கமும்,புகைப்பிடிக்கும் பழக்கமும் தன்னிடம் இல்லை என்று தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் டீ, காபி உள்ளிட்ட எதையும் தான் அருந்த மாட்டேன் என்றும் தான் ஒரு டீட்டோட்டலர் என்பதையும் தெரிவித்து பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தார். மேலும் பேசிய அவர் டீட்டோடேலர் ஆக சினிமாவில் இருப்பது லாபமா, நஷ்டமா என்று கேட்டாள் நஷ்டம்தான் என விளக்கம் கொடுத்தார்.

Also Read : இதுவரை நெகட்டிவ் கேரக்டரில் நடிக்காத ஒரே ஹீரோ.. வெளிவந்த 35 வருட ரகசியம்

சினிமாவை பொறுத்தவரை அதிகமாக ஒதுக்கப்படுவோம், சேர்த்துக் கொள்ளப்படமாட்டோம், அவ்வளவுதான் இந்த துறை. ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் மனநிலை மாறிவிட்டது என்றும் ஆனந்த் ராஜ் தெரிவித்தார்.

பலரும் நல்லவர் யார் என்பதை அவர்களாகவே முடிவு செய்துக்கொள்கிறார்கள். தங்களுக்கு பிடித்தவர்களாக இருந்துவிட்டால் அவர்கள் நல்லவர், அப்படி இல்லாமல் அவர்கள் விருப்பம் போல் வாழ்ந்தால் அவர்கள் கெட்டவர்கள். இப்படித்தான் இவ்வுலகில் பலரும் தங்களை மாற்றியமைத்து வாழ்கிறார்கள்.இது தனக்கு வேதனையளிப்பதாக ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார்.

Also Read : அஜித்திற்கு வில்லனாக நடிக்க வேண்டும்.! சிக்ஸ் பேக் நடிகரின் அதிரடி பேட்டி

Trending News