சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து சாதித்த நடிகர்கள் பலர் உள்ளனர். உதாரணமாக நடிகர் சிவகார்த்திகேயனை கூறலாம். அவரும் சாதாரண தொகுப்பாளராக இருந்து தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவரை போலவே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தான் அந்த நடிகை. அவர் நாயகியாக அறிமுகமான முதல் படமே நல்ல வெற்றி பெற்றது. அவரது நடிப்பு என்பதை தாண்டி வசீகரிக்கும் அழகும் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகை பிரபலமாக முக்கிய காரணமாக அமைந்தது.
அதுதவிர நடிகை நடிப்பா வெளியான அனைத்து படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறதாம். அந்த நடிகை மட்டுமே தற்போது கைவசம் 10க்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ளார். மேலும் பல புதிய பட வாய்ப்புகளும் நடிகையை தேடி வந்த வண்ணம் உள்ளதாம்.
ஆனால் அம்மணி முன்னணி நடிகர்களின் படங்களை பிடிக்காமல், இரண்டாம் நிலையில் இருக்கும் நடிகர்களோடு தான் அதிகமாக நடித்து வருகிறார். நடிகைக்கு பட வாய்ப்புகள் குவிய இதுவும் ஒரு காரணம். முன்னணி நடிகருடன் மட்டும் தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளை சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார் நடிகை.
நடிகையின் இந்த வளர்ச்சியை கண்டு பொறாமையில் இருக்கும் சக நடிகைகள் அவர் மட்டும் எப்படி பட வாய்ப்பை பிடிக்கிறார் என தெரியாமல் குழம்பி வருகிறார்களாம். மேலும் நடிகைகள் வாய்ப்பு தேடும் இடங்களில் எல்லாம், சின்னத்திரை நடிகைக்கே முன்னுரிமை கொடுத்து வருவதால், சில நடிகைகள் பொறாமை பட்டு ஒன்று சேர்ந்து, நடிகையின் படங்களை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார்களாம். என்ன ஒரு வில்லத்தனம்?