விஜய் டிவியில் புதுசாக வரப்போகும் 2 சீரியல்கள்.. பாக்யாவை தொடர்ந்து முடிவுக்கு வரும் சீரியல்

Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்கள் எல்லாமே மக்களிடம் பேராதரவு பெற்று வருகின்றது. இதில் பல வருடங்களாக இழுத்தடித்து வந்த பாக்கியலட்சுமி சீரியல் வருகிற வாரத்துடன் இறுதி அத்தியாயத்தை முடிக்கப் போகிறார்கள். ஆரம்பத்தில் இந்த சீரியல் இல்லத்தரசிகள் கொண்டாடும் விதமாக இருந்தாலும் போகப் போக கதைகள் சரியில்லாமல் கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி விட்டது.

ஆனாலும் கிட்டதட்ட ஐந்து வருடங்களாக இழுத்தடித்திருக்கிறார்கள். இந்த சீரியல் பார்ப்பவர்களுக்கு மட்டும் இல்லாமல் நடிப்பவர்களுக்கும் போர் அடித்ததால் தான் எழில் கதாபாத்திரத்தில் நடித்த விஷால் பாதியிலேயே போய்விட்டார். அதே மாதிரி ராதிகா கேரக்டரில் நடித்த ரேஷ்மாவும் ஜீ தமிழில் கார்த்திகை தீபத்தில் நடிப்பதற்கு முக்கிய கதாபாத்திரம் கிடைத்ததால் அவரும் போய்விட்டார்.

இதனால் இதற்கு மேலையும் இந்த நாடகத்தை இழுத்தடிக்க முடியாது என்பதற்காக முடிப்பதற்கு சேனல் தரப்பில் தயாராகிவிட்டது. இதைத் தொடர்ந்து இன்னொரு சீரியலும் முடிவுக்கு வரப்போகிறது. அந்த வகையில் சக்திவேல் என்ற சீரியல் தென்னரசு ஒவ்வொரு பிரச்சனையும் மாட்டிக்கொண்டு முழித்துவருகிறார். தேன் தென்னரசுவின் கல்யாணத்தை நடக்க விடாமல் தடுத்து நிறுத்தி விட்டார்.

அடுத்து அப்பா வாழ்ந்த வீட்டை மீட்டு கொடுக்கும் விதமாக சக்திவேல் ஏலத்தில் அந்த வீடு எடுப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார். இதனால் மீதமிருக்கும் தென்னரசும் கடைசியில் திருந்திய படி இந்த நாடகம் முடிவுக்கு வந்துவிடும். இதற்கு பதிலாக மககளே என் மருமகளே, தனம் பாக்கியம் என்ற இரண்டு சீரியலும் அடுத்தடுத்து வருவதற்கு வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது.