உங்க ஃபேவரைட் சீரியல் எந்த இடத்தில் இருக்கு? லேட்டஸ்ட் TRP ரேட்டிங் இதோ!
2025-ம் ஆண்டின் 46வது வாரத்திற்கான டாப் 5 சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது. ஒரு காலத்தில் சின்னத்திரையில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த சன் டிவிக்கு, தற்போது விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் கடும் போட்டியை அளித்து வருகின்றன. இந்த வாரம் வெளியிடப்பட்டுள்ள தரவரிசையில், சன் டிவி சீரியல்களின் ஆதிக்கம் சற்று குறைந்து, விஜய் டிவி சீரியல்கள் திடீரென முன்னேறியுள்ளன.
தமிழ் சின்னத்திரை உலகில் மாற்றங்கள் எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும். குறிப்பாக சீரியல் பார்வையாளர்களின் ரசனையும், கதைகளின் போக்கும், சேனல்களின் போட்டி நிலையும் ஒவ்வொரு வருடமும் புதிய திருப்பங்களை உருவாக்குகின்றன. ஒருகாலத்தில் “தனிக்காட்டு ராஜா” என அழைக்கப்பட்ட சன் டிவி, 2015க்குப் பிறகு விஜய் டிவி மற்றும் ஜீ தமிழின் எழுச்சியால் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது.
2025-ம் ஆண்டின் 46வது வார டிஆர்பி அறிக்கை தற்போது வெளியாகி, சன் டிவியைக் கடந்து விஜய் டிவி பல தொடர்களை முன்னிலைப்படுத்தியுள்ளதோடு, முதல் 5 இடங்களில் பல மாற்றங்களும் நடந்துள்ளன.
விஜய் டிவியின் மெல்ல மெல்ல வளர்ந்து வரும் சீரியல் ‘அய்யனார் துணை’, கடந்த வாரம் 8.55 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் இருந்தது. இந்த வாரம் 8.63 புள்ளிகளைப் பெற்று மூன்று இடங்கள் உயர்ந்து 5-வது இடம் பிடித்துள்ளது. சமூக தளங்களில் இந்த சீரியல் டிரெண்டிங் ஆகி வருவதும், டிஆர்பியில் உயர்வுக்கு ஒரு காரணமாகும்.
சிறகடிக்க ஆசை, கடந்த வாரம் 9.35 ரேட்டிங்குடன் 4-ம் இடத்தில் இருந்தது. இந்த வாரமும் 8.78 புள்ளிகளுடன் அதே இடத்தை தக்க வைத்துள்ளது. இது விஜய் டிவிக்கு மிக முக்கியமான வெற்றி. கடும் போட்டி இருந்தபோதிலும் தரவரிசை குறையாமல் இருப்பது, இந்த தொடரின் ரசிகர் வட்டாரம் எவ்வளவு உறுதியானது என்பதை காட்டுகிறது.
சன் டிவியின் பிரபலமான நைன்-ஆவர் சீரியல், ‘சிங்கப்பெண்ணே’, கடந்த வாரம் 9.48 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தது. ஆனால் இந்த வாரம் 8.94 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்துக்கு வந்துவிட்டது. ஸ்டோரி லைனில் சில நீட்டிப்பு காட்சிகள், கதையின் வேகம் குறைவு போன்றவை ரேட்டிங் குறைவிற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
சன் டிவியின் மிகப்பெரிய ஹிட்களில் ஒன்றான கயல், இந்த வாரம் ரேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த வாரம் 9.41 புள்ளிகளுடன் 3-ம் இடம் பிடித்திருந்த இந்த தொடர், இந்த வாரம் 9.10 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்துக்கு உயர்ந்துள்ளது.
சன் டிவியின் பிரைம் டைம் மாபெரும் ஹிட் ‘மூன்று முடிச்சு’, கடந்த வாரம் 10.18 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருந்தது. இந்த வாரமும் 9.61 ரேட்டிங்குடன் முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது.
