விதிமீறலில் சிக்கிய பிக் பாஸ் பிரபலங்கள்.. ரெட் கார்ட் வாங்கியவர்கள் லிஸ்ட்
பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் விதிகளையும் மீறி நடந்துகொண்டதால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மற்றும் தற்போதைய சீசனில் அரங்கேறிய அதிரடி மாற்றங்கள் குறித்த முழு தொகுப்பு.
விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ், தற்போது 9வது சீசனை எட்டியுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசனில், இதுவரை இல்லாத ஒரு திருப்பமாக ஒரே நாளில் இரண்டு போட்டியாளர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு அவர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை பிக்பாஸ் வரலாற்றில் ரெட் கார்டு பெற்று வெளியேறிய லிஸ்ட்.
மகத்
பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதன்முதலாக ரெட் கார்டு பெற்று வெளியேறியவர் நடிகர் மகத். சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட மோதலில், எல்லை மீறிய கோபம் மற்றும் உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறி அவர் எஜக்ட் செய்யப்பட்டார். இது அக்காலத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
சரவணன்
மூன்றாவது சீசனில் நடிகர் சரவணன் அவர்கள், பொது மேடையில் ஒரு விவாதத்தின் போது பெண்களைப் பற்றி தவறாகப் பேசிய பழைய சம்பவம் வைரலானது. இது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பிக்பாஸ் நிர்வாகம் அவருக்கு ரெட் கார்டு வழங்கி வெளியேற்றியது.
பிரதீப் ஆண்டனி
பிக்பாஸ் சீசன் 7-ல் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது ஒரு மிகப்பெரிய பேசுபொருளானது. வீட்டில் இருந்த சில பெண் போட்டியாளர்கள் அவருக்கு எதிராக பெண்களின் பாதுகாப்பு குறித்து புகார்களை முன்வைத்ததை அடுத்து, மற்ற போட்டியாளர்களின் ஓட்டுக்கள் அடிப்படையில் அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
கம்ருதீன் மற்றும் பார்வதி
தற்போது நடைபெற்று வரும் 9-வது சீசனில், கார் டாஸ்கின் போது சான்ட்ராவிடம் தனிமனித தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறி கம்ருதீன் மற்றும் பார்வதி ஆகிய இருவருக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் ரெட் கார்டு பெற்று வெளியேறிய முதல் பெண் போட்டியாளர் என்ற பெயரை பார்வதி பெற்றுள்ளார்.
இதுவரை ரெட் கார்டு பெற்றவர்களில் 4 பேர் ஆண்கள், ஒருவர் மட்டுமே பெண். இந்த முறை விஜய் சேதுபதி, விதிகளின் மீதான தனது கண்டிப்பை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். டாஸ்க் என்ற பெயரில் எல்லையை மீறுபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
