1. Home
  2. தொலைக்காட்சி

பிக் பாஸ் 7-ல் மிகவும் பிரபலமான 5 போட்டியாளர்கள்

பிக் பாஸ் 7-ல் மிகவும் பிரபலமான 5 போட்டியாளர்கள்
பிக் பாஸ் சீசன் 7ல் பிரபலமான ஐந்து கண்டஸ்டண்ட்.

Popular Contestants in Bigg Boss 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 துவங்கப்பட்ட நாளில் இருந்தே காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. முதலில் 18 போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்த நிலையில் அதன் தொடர்ச்சியாக மேலும் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களாக களம் இறங்கி உள்ளனர். இதனால் பிக் பாஸ் வீடு ரணகளமாக இருக்கிறது.

இந்த சீசனில் மக்கள் மத்தியில் மிகவும் பாப்புலரான டாப் 5 போட்டியாளர்களின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது. இதில் 5-வது இடத்தில் அமுல் பேபி விஷ்ணு இருக்கிறார். இவர் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பரீட்சையமாகி, அதன் பின் சத்யா சீரியலில் அமுல் பேபி ஆக நடித்தார். ஆனால் இவர் பிக் பாஸ் 7ல் கலந்து கொண்ட போது முதல் இரண்டு வாரங்களில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது வீட்டில் இருக்கிற இடம் தெரியாமல் அடங்கி போயிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக 4-வது இடத்தில் ஜோவிகா இருக்கிறார். வத்திக்குச்சி வனிதாவின் மகளாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜோவிகா 2K கிட்ஸ் ஆக இருந்தாலும் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுடன் சரிக்கு சரியாக நின்னு விளையாடுகிறார். இவருடைய பக்குவமான பேச்சு, தெளிவான விளையாட்டு பலரையும் கவர்கிறது.

இதன் தொடர்ச்சியாக 3-வது இடத்தில் பிரதீப் இருக்கிறார். நடிகர் கவின் நண்பராக ஏற்கனவே இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து அவரை அறைந்தவர். இவர் சைக்கோ போல நினைத்ததை எல்லாம் பேசிக்கொண்டு, அவ்வபோது சிரித்துக் கொண்டு இருந்தாலும் விதிகளை மீறாமல் தனக்குரிய ஆட்டத்தை சிறப்பாக விளையாடுகிறார். இவருக்கு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கிறது. இருப்பினும் இவருக்கு வாயில தான் சனி. சில நாட்களாகவே எல்லை மீறிய வார்த்தைகளை அவ்வப்போது பயன்படுத்துகிறார்.

2-வது இடத்தில் பாடகர் நிக்சன் இருக்கிறார். பிக் பாஸில் கேம் மட்டும் விளையாடிக் கொண்டிருந்தால் 100 நாட்கள் இருந்துவிட முடியாது என்பதை நன்றாக தெரிந்துகொண்ட நிக்சன், கடந்த சில நாட்களாக ஐசுவுக்கு ரூட் போட்டு கரெக்ட் செய்து விட்டார். ஆனால் இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சிக்காக தான் காதலிப்பது போல் சீன் போடுவது அப்பட்டமாக தெரிகிறது. இருந்தாலும் நிக்சன் இந்த சீசனின் ரொமான்டிக் பாயாக பிக் பாஸ் வீட்டில் சுற்றித் திரிகிறார்.

முதல் இடத்தில் கூல் சுரேஷ் இருக்கிறார். சமீபகாலமாக வெளியாகும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கத்திக் கூப்பாடு போடக்கூடிய கூல் சுரேஷ் திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அங்கு இவர் தன்னுடைய நக்கல் நையாண்டி பேச்சுக்களால் பக்கா என்டர்டைனராக இருக்கிறார். அதேசமயம் விளையாட்டிலும் கவனம் செலுத்தியுள்ளார். அதிலும் நேற்று பிரதீப்புடன் இவர் போட்ட சண்டை சற்றும் எதிர்பாராத வகையில் இருந்தது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.