வெள்ளித்திரையை நம்பி அட்ரஸ் இல்லாமல் போன 6 சின்னத்திரை ஹீரோக்கள்.. உருக்குலைந்து போன கனா காணும் காலங்கள் ஸ்ரீ!

Actor Shri: சின்னத்திரையில் நடிகைகளை தாண்டி நடிகர்கள் மக்களின் வரவேற்பை பெறுவது அரிதிலும் அரிது. நூற்றில் ஒரு ஹீரோவுக்கு தான் இது கை கூடும்.

இந்த மாதிரி வெற்றி கிடைக்கும் போது திடீரென அந்த ஹீரோக்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கிறது. இனி வெள்ளித்திரை தான் நமக்கு என்று நம்பி போய் அதில் வெற்றி பெற்றவர்கள் கோடியில் ஒருத்தர்.

வெள்ளித்திரையை நம்பி ஆள் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் போனவர்கள் அதிகம். அப்படி வெள்ளித்திரையை நம்பி அட்ரசை தொலைத்த 6 ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.

அட்ரஸ் இல்லாமல் போன 6 சின்னத்திரை ஹீரோக்கள்

ஸ்ரீ: கனா காணும் காலங்கள் இரண்டாவது சீசன் மூலம் பெரிய அளவில் வெற்றி பெற்றவர் நடிகர் ஸ்ரீ. இதைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில்லம்பு, மாநகரம் போன்ற பட வாய்ப்புகள் கிடைத்தன.

இதை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக ஸ்ரீ பற்றி எந்த ஒரு விஷயம் வெளியே வரவில்லை. சமீபத்தில் இவருடைய வீடியோ மற்றும் போட்டோக்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இர்பான்: கனா காணும் காலங்கள் முதல் சீசன் மூலம் பெரிய அளவில் வெற்றி பெற்றவர்தான் நடிகர் இர்பான். இதைத் தொடர்ந்து இவருக்கு சரவணன் மீனாட்சி இரண்டாவது சீசனின் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த சமயத்தில் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் இந்த சீரியலை திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டார். அவருடைய இடத்தை பூர்த்தி செய்த கவின் சின்னத்திரையில் வெற்றி பெற்றதோடு தற்போது வெள்ளி திரையிலும் கலக்கி வருகிறார்.

ப்ரஜின்: சன் மியூசிக் சேனல் ஆரம்பித்த புதிதில் அந்த சேனலை பார்ப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ப்ரஜின். இவருக்கு அவ்வளவு பெண் ரசிகைகள் அந்த சமயத்தில் இருந்தார்கள்.

இதை தொடர்ந்து விஜய் டிவியில் இவர் நடித்த காதலிக்க நேரமில்லை, சின்னதம்பி போன்ற சீரியல்கள் பட்டையை கிளப்பின.

இதை தொடர்ந்து இவருக்கு வந்த சினிமா ஆசையால் தற்போது பிரஜின் மக்களால் மறக்க பட்ட ஒரு ஹீரோவாக மாறிவிட்டார் என்பது நிதர்சனமான உண்மை.

அஸ்வின்: குக் வித் கோமாளி மூலம் பிரபலம் அடைந்த அஸ்வின் விஜய் டிவியின் இரட்டைவால் குருவி சீரியலில் முதலில் அறிமுகமானவர்.

தொலைக்காட்சியில் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்த போதும் வெள்ளி திரையால் தற்போது எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார்.

மைக்கேல்: விஜய் டிவியின் பாய்ஸ் vs கேர்ள்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் மைக்கேல். இதை தொடர்ந்து அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பர்மா என்ற படத்தின் மூலம் ஹீரோவான இவருக்கு அதை தொடர்ந்து சீரியல் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

யுவன்: கனா காணும் காலங்கள் சீரியலின் ஜோ கேரக்டர் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்தவர் யுவன்.

இவருக்காகவே இந்த சீரியலை பார்த்த பெண் ரசிகைகள் எல்லாம் உண்டு. காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் ஹீரோவான இவர் அதன் பின்னர் மீடியாவில் இருந்து அப்ஸ்காண்ட் ஆகிவிட்டார்.