சிங்கப்பெண்ணில் ஆனந்தியை பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் அந்த நபர்.. ஆடி போகும் மித்ரா!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தியின் தோழிகள் அவளுடைய இந்த நிலைமைக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்பதற்கு முழு மூச்சுடன் இறங்கி விட்டார்கள்.

ஆனந்தியும் தனக்கு கம்பெனி பார்ட்டி நடத்திய ஹோட்டலில் தான் இந்த மாதிரி நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று ஆதாரத்தை கொடுத்து விட்டாள்.

ஆடி போகும் மித்ரா!

இனி அந்த ஹோட்டலுக்கு சென்று சிசிடிவி கேமரா ஆதாரத்தை எடுப்பது என மூன்று பேரும் முடிவெடுத்து ஹோட்டலுக்கும் செல்கிறார்கள்.

ஆனால் அங்கு தான் யாருமே எதிர்பாராத விதமாக இன்னொரு சம்பவம் அரங்கேறுகிறது. அதாவது ஹோட்டல் பார்ட்டியின் போது எல்லா திட்டத்தையும் பக்காவாக போட்ட மித்ரா மகேஷ் மற்றும் ஆனந்தி அந்த அறைக்குள் போவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

அதே நேரத்தில் சிசிடிவி கேமரா பற்றியும் அவள் யோசிக்கவே இல்லை. இப்போது இந்த சிசிடிவி கேமரா ஆதாரம் கிடைத்தால் ஆனந்தியை மித்ரா ரூமுக்குள் அழைத்துச் செல்வது, மகேஷ் அந்த ரூமுக்கு போவது என எல்லாமே தெரிந்து விடும்.

இன்று வெளியாக இருக்கும் புரோமோவில் ஆனந்தி, ரெஜினா மற்றும் சல்மா ஹோட்டலுக்கு போகும் அதே நேரத்தில் கம்பெனி சம்பந்தப்பட்ட மீட்டிங் ஒன்றிற்காக மித்ரா, தில்லைநாதன், மகேஷ் வருகிறார்கள்.

மித்ரா ஆனந்தி மற்றும் அவளுடைய தோழிகளை பார்த்து விடுகிறாள். ஆனந்தி இந்த இடத்திற்கு தான் ஆதாரத்தை தேடி வந்திருக்கிறாள் என்று தெரிந்தது மித்ரா பேரதிர்ச்சி அடைகிறாள்.

இனி கண்டிப்பாக மித்ரா அந்த சிசிடிவி கேமரா ஆதாரத்தை அழிப்பதற்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த போராட்டத்தில் ஆனந்தி ஜெயிக்கிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.