Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ஆனந்தியின் இந்த நிலைக்கு யார் காரணம் என நிச்சியமாக கண்டுபிடித்து விடலாம் என அவளுடைய தோழிகள் ரெஜினா மற்றும் சல்மா அவளுக்கு தைரியம் கொடுக்கிறார்கள்.
அஸ்திரத்தை கையில் எடுத்த ஆனந்தி
மூன்று பேரும் பார்ட்டி நடந்த ஹோட்டலுக்கு செல்லும்போது அங்கே மகேஷ், தில்லைநாதன் மற்றும் மித்ரா கம்பெனி மீட்டிங் சம்பந்தமாக வருகிறார்கள்.
இதில் மித்ரா ஆனந்தி ரெஜினா மற்றும் சல்மாவை பார்த்து விடுகிறாள். மேலும் அவர்கள் ஆதாரத்தை தேடி தான் வருகிறார்கள் தெரிந்து விடுகிறது.
ஹோட்டல் மேனேஜர் இடம் ஆனந்தியின் மோதிரம் தொலைந்து விட்டதாக சொல்லி சிசிடிவி வீடியோவை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
தனியார் அலுவலக பார்ட்டிகள் நடக்கும் நாளில் நாங்கள் சிசிடிவி கேமராவை ஆப் செய்து விடுவோம் என மேனேஜர் சொல்கிறார். கடைசி நம்பிக்கையாக காட்டேஜ் இருக்கும் இடங்களில் சிசிடிவி கேமரா ஆப் செய்ய மாட்டோம் என ஊழியர் ஒருவர் சொல்கிறார்.
இந்த வீடியோவை தங்களுக்கு எடுத்து தரும்படி ரெஜினா மற்றும் சல்மா மேனேஜரிடம் கேட்கிறார்கள். வீடியோ ரெடி ஆவதற்குள் நாம் ஹோட்டலை சுற்றிப் பார்ப்போம் உனக்கு ஏதாவது ஞாபகம் வர வாய்ப்பு இருக்கிறது என ஆனந்தியிடம் சொல்கிறார்கள்.
உடனே ஆனந்தி, ரெஜினா மற்றும் சல்மா ஹோட்டலை சுற்றி பார்க்க தொடங்குகிறார்கள். அதே நேரத்தில் மித்ரா அவர்களை பின்தொடர்ந்து என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறாள்.
இவர்களுக்கு முன்னால் அந்த இடத்திற்கு சென்று சிசி டிவி வீடியோக்களை மித்ரா ஒன்றுமில்லாமல் ஆக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் ஆனந்தி வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் காரணம் என்ற பதிலை மித்ரா மட்டும்தான் வாயை திறந்து சொல்ல வேண்டும். இது விரைவில் நடக்கிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.