SV Sekar : திரைப்பட நடிகர் எஸ்வி சேகர் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அரசியலில் பல சச்சையான கருத்துக்கள் கொண்டு சிக்கலில் மாட்டிக் கொள்வார் எஸ் வி சேகர்.
இப்போது தன்னுடைய மகள் வயதில் இருக்கும் பெண்ணுடன் திருமண கோலத்தில் இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ஆனால் அது ஒரு சீரியல் தொடருக்காக எடுக்கப்பட்டிருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் நடித்தவர் தான் ஷோபனா. இவர் விஜய் டிவியில் இப்போது பூங்காற்று திரும்புமா என்ற சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். அதற்கான ப்ரோமோவும் அண்மையில் வெளியாகி இருந்தது.
எஸ்வி சேகருக்கு ஜோடியாக நடிக்கும் இளம் வயது பெண்

இது தவிர கலைஞர் தொலைக்காட்சியில் மீனாட்சி சுந்தரம் என்ற தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் எஸ் வி சேகருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். மூத்த மகனுக்கு திருமணம் ஆகி ஒரு மகனும் உள்ளார்.
மகன்களுக்கு சுத்தமாக அப்பாவை பிடிக்காத நிலையில் மகள் மட்டும் சப்போர்ட் செய்கிறார். மேலும் இரு மகன்கள், மருமகள் மற்றும் பேரன் மூவரும் கோயிலுக்கு போகும்போது அங்கு எஸ்வி சேகருக்கு ஷோபனாவுடன் திருமணம் நடக்கிறது.
இதை பார்த்து குடும்பமே அதிர்ச்சியில் உறைய, பேரன் தாத்தாக்கு கல்யாணம் என்று ஷாக் ஆகிறான். இவ்வாறு இதுவரை பார்த்திடாத ஒரு புதுவிதமான கதைக்களத்துடன் மீனாட்சி சுந்தரம் தொடர் ஒளிபரப்பாக உள்ளதால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.