1. Home
  2. தொலைக்காட்சி

காதல் பரத் போல் பைத்தியமாகிய எக்ஸ் புருஷன்.. ரெண்டு பொண்டாட்டி கதையை உருட்டும் பாக்கியலட்சுமி

காதல் பரத் போல் பைத்தியமாகிய எக்ஸ் புருஷன்.. ரெண்டு பொண்டாட்டி கதையை உருட்டும் பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி தொடரில் பைத்தியமாகும் அமிர்தாவின் எக்ஸ் புருஷன்.

Baakhiyalakshmi Serial: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது இரண்டு பொண்டாட்டி கதையை உருட்டி வருகிறார்கள். அதாவது ஆரம்பத்தில் கோபி பாக்கியா உடன் வாழ்ந்த வரும்போது ராதிகாவுடன் பழகி வந்தார்.

இதனால் பல பிரச்சனைகள் வெடித்த நிலையில் ஒருவழியாக பாக்கியா கோபியை தூக்கி எறிந்து விட்டார்.  ராதிகாவுடன் கோபி வாழ்ந்து வருகிறார். அடுத்ததாக செழியன் மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும்போது வேறு ஒரு பெண்ணுடன் பழகி வருகிறார். அதுவும் சைக்கோ போல் மாலினி செழியனை டார்ச்சர் செய்து வருகிறார்.

அடுத்ததாக கடைசி மகன் எழில் வாழ்க்கையிலும் இப்போது சூறாவளி வீச தொடங்கி விட்டது. அதாவது அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் அவரை தேடி சென்னைக்கு வந்து விடுகிறார். அமிர்தா படித்த காலேஜ் மற்றும் தோழிகள் என சுற்றி அலைந்து கொண்டிருக்கிறார்.

அப்போதுதான் அமிர்தாவின் நெருங்கிய தோழி ஒருவரால் அவருக்கு ஏற்கனவே திருமணமான செய்தி தெரிய வருகிறது. இதனால் காதல் பரத் போல் பித்து பிடித்து இருக்கிறார். அதாவது தனது மனைவி மற்றும் மகள் ஆகியோரை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வந்த அவருக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் இப்போது அமிர்தாவை தேடி கணேஷ் செல்வாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. மேலும் கண்டிப்பாக தனது மகளை பார்க்க வேண்டும் என்பதற்காகவாவது அமிர்தா வீட்டுக்கு செல்ல இருக்கிறார். இதனால் அங்கு பூகம்பமே வெடிக்க இருக்கிறது.

இதனால் எழில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பரபரப்பான திருப்பங்கள் வர இருக்கிறது. இவ்வாறு பாக்கியலட்சுமி இயக்குனர் ரெண்டு பொண்டாட்டி கதையையே உருட்டி ரசிகர்களை எரிச்சலடைய செய்கிறார். இப்போது இந்த தொடரை பார்க்கவே ரசிகர்களுக்கு அனுப்பு ஏற்பட்டிருக்கிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.