சிங்கப்பெண்ணில் உறுதியான ஆனந்தியின் கர்ப்பம், பழியை சுமக்கும் அன்பு.. ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் மகேஷ்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி மற்றும் அன்பு அழகப்பனிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்குவது தான் சீரியலின் அடுத்த கட்டம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரசிகர்கள் மறந்து கிடந்த ஆனந்தியின் கர்ப்பம் பற்றிய ட்ராக்கை மீண்டும் கொண்டு வந்து விட்டார் இயக்குனர்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவின் ஆனந்தியை செக் பண்ணிய டாக்டர் அவள் கர்ப்பமாக இருக்கிறாளோ என்று சந்தேகம் இருப்பதாக சொல்கிறார்.

உறுதியான ஆனந்தியின் கர்ப்பம்

அது மட்டும் இல்லாமல் அன்பு அவளுடன் ரொம்பவும் நெருக்கமாக பேசுவதால் அவன்தான் இதற்கு காரணம் என்றும் சந்தேகப்படுகிறார்.

அதே நேரத்தில் வார்டனை ஹாஸ்டலுக்கு பார்க்க வந்த மகேஷ் ஆனந்தியை சந்திக்க நேரிடுகிறது. மீண்டும் தன்னுடைய காதலை பற்றி ஆனந்தி இடம் பேசுகிறான்.

இது ஆனந்திக்கு ஒருவித தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஹாஸ்டல் வார்டன் ஆனந்தியிடம், ஆனந்தியின் அப்பா அழகப்பன் போன் பண்ணியதை பற்றி சொல்கிறார்.

மேலும் மகேசை திருமணம் செய்தால் உன்னுடைய எதிர்காலம் நன்றாக இருக்கும் என உன்னுடைய அப்பா எதிர் பார்க்கிறார் என்று சொல்கிறார்.

ஏற்கனவே மருத்துவமனை சம்பவத்தால் குழம்பிப் போயிருக்கும் ஆனந்தியை மகேஷ் மற்றும் வார்டன் தங்களால் முடிந்த அளவுக்கு இன்னும் அதிகமாக குழப்பி இருக்கிறார்கள்.

ஆனந்தியின் கர்ப்ப செய்தி வழக்கம் போல் ஒன்றும் இல்லாமல் போகிறதா அல்லது உண்மையிலேயே ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment