1. Home
  2. தொலைக்காட்சி

கோமதியின் வாரிசு என நிரூபித்த அரசி.. குமரவேலு சொல்லப்போகும் உண்மை, சதீஷ் கொடுக்கும் ட்விஸ்ட்

கோமதியின் வாரிசு என நிரூபித்த அரசி.. குமரவேலு சொல்லப்போகும் உண்மை, சதீஷ் கொடுக்கும் ட்விஸ்ட்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசிக்கு சதிஷ் உடன் நடக்கும் கல்யாணத்தை நிறுத்தி அரசி மூலம் பாண்டியன் குடும்பத்திற்கு அவமானத்தை கொடுக்க வேண்டும் என்று குமரவேலு பிளான் போட்டார். அந்த வகையில் அரசியை சிக்க வைத்து ஒரு நாள் முழுவதும் தன் கூடவே, குமரவேலு வைத்திருந்தார்.

இதனால் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அரசி எங்கே போனார் என்று தெரியாமல் தவித்தார்கள். அந்த நேரத்தில் மாப்பிள்ளை குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பாண்டியன் வீட்டிற்கு வந்து விட்டார்கள். பிறகு வந்ததும் அரசி காணவில்லை என்று சதீஷின் அம்மாவுக்கு தெரிந்த நிலையில் பாண்டியனிடம் அரசி எங்கே என்று கேட்கிறார்.

இதற்கு எதுவும் பதில் சொல்ல முடியாத நிலையில் ஒட்டுமொத்த குடும்பமும் அமைதியாக நின்றது. அந்த நேரத்தில் குமரவேலு, அரசியை கூட்டிட்டு காரில் வந்து இறங்குகிறார். அப்பொழுது பழனிச்சாமி, குமரவேலு வந்துவிட்டார் என்று சொல்லிய நிலையில் அனைவரும் வெளியே வந்து பார்க்கிறார்கள்.

குமரவேலு பழிவாங்கும் என்னத்துடன் இருப்பதால், எல்லோரிடமும் ஒரு நாள் முழுவதும் அரசி என்னுடன் தான் இருந்தார் என்று சொல்கிறார். இதை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியாகி விட்டார்கள். காருக்குள் இருந்து அழுது கொண்டிருந்த அரசி வெளியே வருகிறார். வந்ததும் கழுத்தில் இருக்கும் தாலியை காட்டுகிறார்.

இதை எதிர்பார்க்காத குமரவேலு அதிர்ச்சி ஆகிவிட்டார். அந்த வகையில் காருக்குள்ள இருந்த தாலியை அரசி தனக்குத்தானே கட்டிக் கொண்டார். அப்பொழுது வெளியே வந்துவிட்டு இந்த குமரவேலு, என்னிடம் வந்து வேறு யாரையாவது நீ கல்யாணம் பண்ணிக் கொண்டால் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் என்று சொன்னான்.

அதனால் அவனை பார்த்து பேசுவதற்காக போனேன், பிறகு என் கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்டிவிட்டான் என்று அரசி சொல்கிறார். உடனே குமரவேல் நான் எதுவும் பண்ணவில்லை தாலியும் கட்டவில்லை சும்மா, பாண்டியனே பழி வாங்குவதற்காக தான் நான் இப்படி பண்ணேன் என்று நடந்த உண்மையை சொல்லப் போகிறார்.

அந்த வகையில் அரசியை அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைத்த குமரவேலு, தற்போது அவன் வாயாலேயே எல்லா உண்மையும் சொல்லும் அளவிற்கு அரசி தரமான சம்பவத்தை செய்து விட்டார்.

அந்த வகையில் கோமதி எப்படி அண்ணன் மானத்தை காப்பாற்ற வேண்டும் என்று ராஜி கழுத்தில் கதிரை தாலி கட்ட வைத்தாரோ, அதே மாதிரி அப்பாவின் மானத்தை காப்பாற்ற வேண்டும் என்ற அரசி இந்த மாதிரி ஒரு சம்பவத்தை செய்து விட்டார். பிறகு சதீஷ் நடந்த உண்மையை தெரிந்து கொண்டு அரசி கழுத்தில் தாலி கட்டுவதற்கு சம்மதம் என்று கல்யாணம் பண்ணிக் கொள்வார்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.