Amir-Pavni: அமீர் மற்றும் பாவனியின் திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் நாத்தனார் முறையில் பிரியங்கா எல்லாம் செய்தது பெரிய அளவில் வைரலானது.
அதே நேரத்தில் அமீர் இந்த அளவுக்கு வளர ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருந்த பிக் பாஸ் ஐஷுவின் குடும்பம் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளாததும் பெரிய அளவில் பேசப்படுகிறது.
தனியாக வாழ்ந்து கொண்டிருந்த அமீருக்கு மிகப்பெரிய பொருளாதார உதவி செய்ததோடு அவரை தங்களுடைய வீட்டிலேயே ஒரு ஆளாக கவனித்து வந்தார்கள் அஷ்ரப் குடும்பத்தினர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தான் இது குறித்து வெளியில் வந்தது. பின்னர் அமீர் பாவனி காதலுக்கு பிறகு இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு பேச்சு வார்த்தை இல்லாமல் போனது.
இன்ஸ்ட்டா ஸ்டோரி
இந்த நிலையில்தான் அஷ்ரப் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். நீங்கள் ரோட்டில் போகும்போது நாய் ஒன்று மழையில் நனைந்து கொண்டிருந்தால் அதை காப்பாற்றுங்கள். அதை பேணி பாதுகாத்து வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
அதே இடத்தில் மனிதன் இருந்தால் தயவு செய்து கண்டு கொள்ளாமல் போய்விடுங்கள். அவனை வீட்டிற்கு கூட்டி சென்று கவனிக்க வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்.


இதற்கு நான் தான் ஒரு மிகப்பெரிய உதாரணம் என பதிவிட்டு இருக்கிறார். அஷ்ரப் நேரடியாக அமீரை தான் இப்படி சொல்கிறார் என எல்லோருக்குமே தெரியும்.
ஆனால் இந்த அளவுக்கு பகை ஏற்படும் அளவுக்கு இவர்களுக்குள் என்ன நடந்தது என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது.