Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா புகுந்த வீட்டில் படும் கஷ்டத்தை கோபி இடம் சொல்லி பீல் பண்ணி பேசுகிறார். இதை கேட்டதும் கோபி அவசரப்பட்டு இனியாவை சுதாகர் வீட்டில் கல்யாணம் பண்ணிக் கொடுத்து தப்பா போய்விட்டது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார். உடனே பாக்யாவிடமும் நீ சொல்லிக் கேட்காமல் நான் பிடிவாதமாக இனியாவை கல்யாணம் பண்ணிக் கொடுத்தது தப்புதான்.
எல்லாம் என்னுடைய அவசர புத்தியால் வந்த வினை என்று சொல்கிறார். அதற்கு பாக்யா, ஏன் என்னாச்சு ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். அப்பொழுது இனியா நித்தேஷ் மூலம் அனுபவிக்கும் சித்திரவதையை பற்றி கோபி, பாக்யாவிடம் சொல்லிவிடுகிறார். உடனே இதைப் பற்றி கேட்க வேண்டும் என்று பாக்கிய கிளம்பும் பொழுது கோபி கூடவே நானும் வருகிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார்.
ஆனால் அதற்கு முன் வீட்டிற்கு வந்த இனியாவிடம் நித்தீஷ் மற்றும் மாமியார் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நீ என்ன எதுக்கெடுத்தாலும் உன் அம்மா வீட்டுக்கு போகிறாய், உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது கொஞ்சம் பொறுப்பா இங்க இருக்க பழகிக்கொள் என்று கரராக மாமியார் பேச ஆரம்பிக்கிறார். இன்னொரு பக்கம் நித்தீஷ், தவறான கண்ணோட்டத்தில் இனியாவிடம் ஆகாஷ் வைத்து பேசுகிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இனியாவும் பேசிய நிலையில் சுதாகர் இருவரையும் கண்ட்ரோல் பண்ணி விடுகிறார். அதன் பிறகு பாக்யா மற்றும் கோபி வீட்டுக்கு வருகிறார்கள். வந்ததும் சுதாகரிடம் என் பொண்ணு சந்தோசமாக இல்லை, நீங்க மதிப்பு மரியாதை கொடுத்து பேச பழகிக் கொள்ளுங்கள் என்று கோபி சொல்கிறார். உடனே நித்தேஷ், இனிய ஆகாஷ் காதலித்த விஷயத்தை பற்றி பேசி பாக்கியாவை டென்ஷன் ஆக்கிவிட்டார்.
பாக்கியமும் அதற்கு பதில் கொடுத்து பேசும்போது நித்தேசும் வாக்குவாதம் பண்ண ஆரம்பித்து விட்டார். இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஆரம்பித்த நிலையில் சுதாகர் மற்றும் கோபி இவர்களை சமாதானப்படுத்தி விட்டார்கள். அதன் பின் சுதாகர், இந்த மாதிரி விஷயத்தில் இனி நித்தேஷ் தரப்பில் இருந்து பிரச்சனை வராது. அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.
உடனே பாக்கியா, இனியா வேலைக்கு போற விஷயத்தை பற்றி கேட்கிறார். அதற்கு சுதாகர் பிரச்சனை என்றால் அத பத்தி பேசுங்க. அதற்கு என்ன தீர்வு பண்ண முடியுமோ அதை நான் பண்ணுகிறேன். இதை விட்டுவிட்டு வேலைக்கு போற விஷயத்தை பற்றி பேச வேண்டாம். இது என்னுடைய கௌரவ பிரச்சனை, அதனால் எப்பொழுது என்ன பண்ணனும் என்று எனக்கு தெரியும் என கடுமையாக பேசிய நிலையில் கோபி, பாக்யாவை அங்கிருந்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்.
வீட்டிற்கு வந்த பாக்கிய கோபத்துடன் கோபியிடம் நீங்கள் ஏன் பேசிக் கொண்டிருக்கும் போது என்னை கூட்டிட்டு வந்தீங்க. என் பொண்ணு இவ்வளவு கஷ்டப்படுறதுக்கா நான் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து பொறுமையாக இருக்கிறேன். அவர்களின் புத்தி தெரிந்து தான் நான் இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன். என் பேச்சைக் கேட்கவில்லை. இப்பொழுது என் மகள் கஷ்டப்படுவது என்னால் பார்த்துக் கொண்டே இருக்க முடியவில்லை என்று சொல்கிறார்.
ஆனால் கோபி தெரிஞ்சே தெரியாமல் செஞ்ச பாவம் தற்போது இனிய மீது விழுந்தது போல் ஆகாஷ் இனியவை வைத்து நித்தீஷ் மற்றும் குடும்பத்தில் இருப்பவர்கள் சந்தேகப்பட்டு டார்ச்சர் பண்ணி வருகிறார்கள். இதற்கெல்லாம் தீர்வாக இனியா நீயும் வேண்டாம் உன் குடும்பமும் வேண்டாம் என்று புகுந்த வீட்டை உதறி தள்ளிவிட்டு பாக்கியவுடன் வந்து நிற்கப் போகிறார்.