1. Home
  2. தொலைக்காட்சி

பிக்பாஸ் 9 இல் இரட்டை அதிர்ச்சி.. கனி அவுட்! ரெட் கார்டு யாருக்கு?

bigg-boss-9-kani

இந்த வார பிக்பாஸ் 9 எவிக்ஷனில், ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் கனி குறைந்த வாக்குகளால் வெளியேறியுள்ளார். திவாகர் ஓட்டிங்கில் சேப் ஆனபோதும், அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படலாம் என தகவல் பரவி வருகிறது.


பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இப்போது மிக முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் திருப்பமும், திடீர் மாற்றங்களும் நிகழ்கின்ற சூழலில், இந்த வார எவிக்ஷன் ரசிகர்களையும், வீட்டினரையும் பெரிய அளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குறிப்பாக, ஆரம்ப நாட்களிலிருந்தே டைட்டில் வின்னர் ரேஸில் முன்னிலையில் இருந்த கனி, குறைந்த வாக்குகளால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் தகவல் அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் முக்கியமாக, இந்த வாரம் ரெட் கார்டு வழங்கப்பட்டதாக பரவும் செய்தி இன்னும் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக கனி, போட்டியாளர்களின் நல்ல பார்வையைக் கொண்டிருந்தவர். ஆனால் இந்த வாரம் முதல் முறையாக, வீட்டினரின் வாக்குகளால் அவர் நாமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்டார். இதுவே அவரின் பயணத்தில் பெரிய திருப்பமாக அமைந்தது. அவர் வெளியேறுவது மட்டும் யாரும் நினைக்கவில்லை.

இப்போது ரசிகர்களை இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தி வரும் விஷயம் ஒன்று — ரெட் கார்டு. பொதுவாக, ரெட் கார்டு என்பது மிகப்பெரிய விதிமுறைகளை மீறியபோது திடீர் வெளியேற்றம் செய்யப்படும் கடுமையான நடவடிக்கை.

இந்த வாரம் பலர் எதிர்பாராத வகையில் திவாகருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படலாம் என்று தகவல் பரவி வருகிறது.  அவர் இந்த வார ஓட்டிங்கில் நெருக்கடியான நிலையிலிருந்து தப்பித்து சேப் ஆனவர்! ஆனால் திடீரென ரெட் கார்டு பேசப்படுவதால் சந்தேகம் அதிகரித்துள்ளது.

கனி வெளியேறியது, திவாகர் ரெட் கார்டு விவகாரம் bஇவை இரண்டும் சேர்ந்து வீட்டில் மிகப்பெரிய மனஅழுத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கலாம். 

பரவும் தகவல்களில் எது உண்மை, எது வதந்தி என்று தற்போது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் பிக்பாஸ் வரலாற்றில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த வாரம் எவிக்ஷன் நடந்திருக்கிறது என்பது உறுதி.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.