அடல்ட் வெப் சீரிஸில் பிக் பாஸ் ஜோடி.? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்களான எஃப்ஜே மற்றும் அரோரா, முன்னதாக ஒரு அடல்ட் வெப் சீரிஸில் இணைந்து நடித்த தகவல் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ், ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவது வழக்கம். ஆனால், தற்போது ஒளிபரப்பாகி வரும் 8-வது சீசன், ஆரம்பம் முதலே 'அடல்ட் கன்டென்ட்' புகார்களால் திணறி வருகிறது.
குறிப்பாக, மக்கள் மத்தியில் அதிகம் அறியப்படாத முகங்களை இந்த முறை களமிறக்கிய விஜய் டிவி, அவர்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சமீபகாலமாக பிக் பாஸ் வீட்டில் கமருதீன் மற்றும் பார்வதி ஆகியோருக்கு இடையே வளர்ந்து வரும் நெருக்கம் குறித்து சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்தச் சூழலில், தற்போது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல மற்ற இரு போட்டியாளர்களான எஃப்ஜே மற்றும் அரோரா குறித்த பகீர் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே, 'ஷூ' (Sshhh) என்ற பெயரிடப்பட்ட 18+ (Adult) வெப் சீரிஸில் இணைந்து நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் மற்றும் சோனியா அகர்வால் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இந்தத் தொடரில், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அடல்ட் காமெடி மற்றும் த்ரில்லர் பாணியில் உருவான இந்தத் தொடரில் நடித்தவர்களையே தேடித்தேடி விஜய் டிவி இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்திருக்கிறதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தத் தகவல் வெளியானதை அடுத்து, "விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கிற்காக தரம் தாழ்ந்து போகிறதா?" என்றும், "குடும்பங்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இத்தகைய பின்னணி கொண்டவர்களை முன்னிலைப்படுத்துவது சரியா?" என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
ஒருபுறம் ஆவேசமான விமர்சனங்கள் எழுந்தாலும், மறுபுறம் இது போன்ற சர்ச்சைகளே பிக் பாஸ் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை கூட்டி வருவதாகவும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
