1. Home
  2. தொலைக்காட்சி

அம்பேத்கர் பெயர் சென்சார் சர்ச்சை! பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது?

bigg-boss-season-9

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இல் ஸ்கூல் டாஸ்க்கின் போது கானா வினோத் அம்பேத்கரை குறிப்பிட்டபோது, அந்த பெயர் மட்டும் மியூட் செய்யப்பட்டதன் மீது சமூக வலைதளங்களில் பெரிய கேள்வி எழுந்துள்ளது. விஜய் டிவி இதை ஏன் மியூட் செய்தது என்பதை விளக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


போட்டியாளர்களின் உணர்ச்சி வெடிப்புகள் என சமூக வலைதளங்களை அதிர வைக்கும் நிகழ்வுகள் நிறைய. இந்த வாரம் நடந்து வரும் ஸ்கூல் டாஸ்க் போது, கானா வினோத் பேசிய ஒரு வரியில் அம்பேத்கர் பெயர் மட்டும் மியூட் செய்யப்பட்டதால் பெரிய விவாதம் வெடித்துள்ளது. “பிக் பாஸ் வீட்டில் அம்பேத்கர் பெயரை பயன்படுத்தக்கூடாதா?” என்ற கேள்வி நெட்டிசன்களுக்கு எழுந்துள்ளது. இந்த சர்ச்சையின் காரணம் என்ன? ஏன் விஜய் டிவி மியூட் செய்தது? இதனால் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? விரிவாக பார்க்கலாம்.

ஸ்கூல் டாஸ்க் மூலம் புது சர்ச்சை

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இந்த வாரம் ‘ஸ்கூல் டாஸ்க்’ எனும் வேடிக்கையான ஆனால் போட்டியாளர்களை பரீட்சிக்கும் டாஸ்க்கை நடத்தி வருகிறது. வீடு முழுவதும் பள்ளி சூழலில் மாற்றப்பட்டு, பிரஜன் பிரின்சிபால், கனி & அமித் ஆசிரியர்கள், பார்வதி & FJ  வார்டன்கள், மற்றவர்கள் மாணவர்கள் என அமைக்கப்பட்டுள்ளனர். இந்த டாஸ்க் வழக்கம்போல நகைச்சுவையையும், சில உளவியல் மோதல்களையும் உருவாக்கி வருகிறது. இந்த டாஸ்க்கில் ஏற்பட்ட ஒரு சிறிய சம்பவம் தற்போது பெரிய அளவில் பேசப்படுகிறது.

கானா வினோத் பேசிய ஒரு வரி ஏன் வைரல் ஆனது?

பிரஜன் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், கானா வினோத் கல்வியின் சமூகப் பயன் பற்றி பேசினார். அவர் கூறியதாவது:

“நீ கற்ற கல்வி உன் சமுதாயத்திற்கு பயன்படவில்லை என்றால் நீ சாவதே மேல்”  அம்பேத்கர் கூறியதாக.

கானா வினோத் இந்த கருத்தை பேசியது பலரின் கவனத்தையும் பெற்றது. ஆனால் அதில் ஒரு விஷயம் மட்டும் ரசிகர்களை அதிர வைத்தது. “அம்பேத்கர்” என்ற பெயர் மட்டும் மியூட் செய்யப்பட்டது.

அம்பேத்கர் என்ற பெயர் மட்டும் மியூட் ஏன்?

காணொளியில் கானா வினோத் பேசும்போது அம்பேத்கர் என்ற வார்த்தையில் மட்டும் விஜய் டிவி மியூட் செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகள், பிக் பாஸ் வீட்டில் அம்பேத்கர் பெயரை சொல்லக்கூடாதா? அரசியல் அல்லது சமூக தலைவர்களின் பெயருக்கு தனி விதிமுறைகள் உள்ளனவா? ஏன் வேறு எதையும் மியூட் செய்யவில்லை? இந்த மியூட் பன்னலானது, தொழில்நுட்ப காரணமா அல்லது ஒளிபரப்புக் கொள்கை காரணமா என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது.

ஒளிபரப்பு விதிமுறைகள் காரணமா? நிபுணர்கள் கருத்து

டிவி சேனல்கள் பொதுவாக சில நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றன: அரசியல், மதம், சமூக தலைவர்களை பற்றிய குறிப்புகளில் தவறான விளக்கம் வராமல் இருக்க மியூட் செய்யப்படலாம். ரியாலிட்டி ஷோக்களில் அசல் உரை மாற்றப்பட்டால், அது சட்ட ரீதியான சிக்கலை ஏற்படுத்தக்கூடும். தவறான மேற்கோள்கள் சேர்க்கப்பட்டால் அது துஷ்பிரயோகம் என கருதப்படும். சில மீடியா நிபுணர்கள் கூறுவது, கானா வினோத் கூறிய மேற்கோள் அம்பேத்கரின் அசல் மேற்கோள் அல்ல என்று பார்க்கப்பட்டிருக்கலாம். அதனால் விவகாரம் தவறாக போகாமல் தடுக்க மியூட் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த சீசனின் மிகப் பெரிய சர்ச்சைகளில் ஒன்று

இந்த சம்பவம், இந்த சீசனின் முதல் 30 நாட்களில் ஏற்பட்ட பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. கடந்த சீசன்களில் இருந்தது போல சண்டைகள், வாக்குவாதங்கள் நடந்தாலும், ஒரு சமூக தலைவரின் பெயர் மியூட் செய்யப்பட்ட சம்பவம் இந்த முதல் தடவை. ரசிகர்கள் பலரும் இதை “மனப்பூர்வமான தவறு” எனப் பார்த்தாலும், சிலர் இதை “அரசியல் சாயம்” கொண்ட நடவடிக்கையாகக் கூறுகின்றனர்.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.